Pages

Thursday, July 12, 2018

அதிரை அருகே புனரமைக்கப்படும் ஏரிகள் பணிகள் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மக்கள் மற்றும் விவசாய சங்கங்கள் பங்களிப்புடன் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேசிய சுகாதாரத் திட்ட குழும இயக்குநர் தாரேஷ் அகமது தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை முன்னிலையில் இன்று (12.07.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவையாறு வட்டம், நாகத்தி ஊராட்சி நாகத்தி வாய்க்காலில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுமானம் மற்றும் புனரமைப்பு பணி நடைபெற்று வருவதை கண்காணிப்பு அலுவலர் அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, ஒரத்தநாடு வட்டம், தோப்புவிடுதி ஊராட்சியில் ரூ.23 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் பனங்குளம் ஏரி, புலவன்காடு ஊராட்சியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் லகுஸ்தான் ஏரி, பட்டுக்கோட்டை வட்டம், பழஞ்சூர் கிராமத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் தச்சனோடை ஏரி, பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் ரூ.47 இலட்சம் இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் அமெரிகுளம் ஏரி ஆகிய ஏரிகளை பார்வையிட்டு, பழைய மதகுகளை அகற்றிவிட்டு புதிதாக கட்டப்பட்டு வரும் மதகுகளையும், தூர் வாரும் பணிகளையும் ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்திடவும், பணிகளை விரைந்து முடித்திட விவசாய சங்கத்தினரிடம் அறிவுறுத்தினர்.

பின்னர், பட்டுக்கோட்டை அக்னியாறு கோட்ட அலுவலகத்தில் குடிமராமத்து பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேசிய சுகாதாரத் திட்ட குழும இயக்குநர் தாரேஷ் அகமது தலைமையில் ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கடைமடை வரை தண்ணீர் கிடைத்திடும் வகையிலும் வரத்து வாய்க்கால்கள், பாசன கால்வாய்கள், மடைகளை சீரமைத்திடவும், முன்னுரிமை அடிப்படையில் வேலைகளை செய்திடவும், வருடாவருடம்  தேவையான பணிகளை செய்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, பொதுப்பணித்துறை காவேரி கோட்ட செயற்பொறியாளர் முகமது இக்பால், அக்னியாறு கோட்ட செயற்பொறியாளர் செல்லமுத்து, வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் அசோகன், கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...