Pages

Thursday, July 5, 2018

​​திமுக எம்.பி. கனிமொழி துபை வருகை: சிறப்பான வரவேற்பு (படங்கள்)

துபாய் : திராவிட முன்னேற்ற கழக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி அமைப்பாளருமான கனிமொழி எம்.பி. இன்று புதன்கிழமை துபாய் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அமீரக திமுகவின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமீரக திமுக ஆலோசகர்களான எவர்கோல்ட் பில்டிங் கிளீனிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே. செல்வம், ஏ.எஸ்.பி. ஆடிட்டிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரின்ஸ் என்ற இளவரசன், அமீரக திமுக தலைவர் தொழிலதிபர் அன்வர் அலி, செயலாளர் பாவை அனிபா, விழாக்குழு செயலாளர் அப்துல்லா கனி, ஆலோசகர் ஜாஹிர், அன்பழகன், காரைக்கால் பாத்திமா, வி.களத்தூர் ஷர்புதீன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக ஆடிட்டர்கள் பிரின்ஸ் என்ற இளவரசன், ராஜாராம், யுகமூர்த்தி, மணிவண்ணன் உள்ளிட்டோரும், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் 06.07.2018 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு துபாய் அல் முத்தீனா சாலையில் அமைந்துள்ள கிராண்ட் எக்செல்சியர் ஓட்டலில் கலைஞர் மு. கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அமீரக தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...