Pages

Thursday, July 5, 2018

துபை பிரேம் செல்ல இனி ஆப் மற்றும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்!

அதிரை நியூஸ்: ஜூலை 05
துபை பிரேம் செல்ல இனி ஆப் மற்றும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி திறக்கப்பட்ட 150 மீட்டர் உயர துபை பிரேம் (Dubai Frame) பில்டிங் திறக்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 466,000 பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளதன் மூலம் துபையின் முக்கியமானதொரு சுற்றுலாத்தளமாக உருவெடுத்துள்ளது. இந்த துபை பிரேம் பில்டிங் செல்வதற்கு இதுவரை அல் ஜபீல் பார்க் கேட் நம்பர் 4 அருகேயுள்ள கவுண்டரில் மட்டுமே டிக்கெட் கொடுக்கப்பட்டு வந்தது.

இனி துபை பிரேம் செல்பவர்கள் ஆன்லைன் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வசதியாக www.dubaiframe.ae  என்ற இணையதளமும், www.dubaiframe.ae  என்ற ஆப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் வழியாக முன்பதிவு செய்யும் போது நமக்கு ஏற்ற நேரத்தையும் தேர்வு செய்து முன்பதிவு செய்யலாம்.

அதாவது உலகின் மிக உயரமான பில்டிங்காக விளங்கும் துபை புரூஜ் கலீபாவில் உள்ள அதே நடைமுறையே இங்கும் பின்பற்றப்படும் என்றாலும் புரூஜ் கலீபாவில் கவுண்டர்களில் ஸ்பாட் டிக்கெட் வாங்குபவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவது போல் இங்கு வசூலிக்கப்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் டிக்கெட் வாங்கும் போதே எத்தனை டிக்கெட்டுகள் எஞ்சியுள்ளன போன்ற விபரங்களும் தெரியவரும். இனி அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக டிக்கெட் புக் செய்யும் போது பிற பார்வையாளர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் நேரம் ஒதுக்கித் தரப்படும் என்றும் அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முறையே 7 மற்றும் 14 நாட்களுக்கு முன்பதாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்படி அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் ஆப் தவிர்த்து ஏனைய துபை பிரேம் டிக்கெட் விற்பனை செய்யும் போலி இணைய தளங்களான www.thedubaiframe.com and www.dubai-frame.com போன்ற பல போலி இணையதளங்கள் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு துபை முனிஸிபாலிட்டி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 பெரியவர்களுக்கு நுழைவு கட்டணம் 50 திர்ஹம், 3 முதல் 12 வயது வரையான சிறார்களுக்கு 20 திர்ஹமும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முற்றிலும் இலவசம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...