Pages

Thursday, July 5, 2018

காதிர் முகைதீன் கல்லூரி மாணவி உலக அளவிலான வலுதூக்கும் போட்டிக்கு தகுதி: கல்லூரிச்செயலர் பாராட்டு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை. 05
அகில இந்திய வலு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்த அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவிக்கு கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் பாராட்டு.

அகில இந்திய அளவிலான வலு தூக்கும் போட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடந்தது. இதில் 300 க்கும் மேற்பட்ட வீரர்களும், 250க்கும் மேற்பட்ட வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இதில், அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் பிபிஏ இரண்டாமாண்டு படிக்கும் மாணவி எஸ்.லோகபிரியா 57 கிலோ உடல் எடைபிரிவில் 357.5 கிலோ எடையை தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

சாதனை படைத்த கல்லூரி மாணவி எஸ்.லோகப்பிரியாவை கல்லூரிச் செயலர் எஸ்.ஜே.அபுல் ஹசன் இன்று வியாழக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அருகில், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம். முகம்மது முகைதீன், உடற்கல்வி இயக்குநர் கே. முருகானந்தம், பயிற்சியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தங்கப்பதக்கம் வென்ற மாணவி லோகபிரியா தென்னாப்பிரிக்காவில் வரும் செப்டம்பர் 2 ம் தேதி முதல் 6 வரை நடைபெறவிருக்கும் உலக வலுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள உள்ளார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...