Pages

Thursday, July 12, 2018

அமீரகத்தில் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்வதற்கான டிப்ஸ்!

அதிரை நியூஸ்: ஜூலை 12
அமீரகத்தில் தற்போது கடும் கோடைகாலம் நிலவி வருகிறது, நடப்பு ஆண்டில் இதுவரை பதிவான வெப்ப அளவில் உச்சபட்ச வெப்பமாக அபுதாபி எமிரேட், லிவா பிரதேசத்தின் மெஸைரா என்ற இடத்தில் 51.5 டிகிரி செல்ஷியஸ் என்று நேற்றைய (புதன்) வெப்பம் பதிவாகியுள்ளது.

அமீரகத்தில் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்வதற்கான டிப்ஸ்:
1.உங்களையோ அல்லது பிறரையோ கார் போன்ற தனிமையான இடங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் நாட்களில் தனியாக இருக்க விடாதீர்கள். குறிப்பாக உங்கள் குழந்தை மற்றும் வளர்ப்புப் பிராணிகளை கார்களுக்குள் தனிமையில் விட்டுச் செல்லாதீர்.

2. வெப்பம் கூடுதலாக காணப்படும் நாட்களில் கடும் உடற்பயிற்சிகளை தவிர்த்து விடுங்கள், வெப்பம் குறைந்து காணப்படும் நேரத்தில் மட்டும் ஓரளவு செய்து கொண்டால் போதுமானாது.

3. எடை குறைவான அல்லது தளர்ந்து காணப்படும் பருத்தி (காட்டன்) உடைகளையே உடுத்துங்கள். வெளியில் செல்லும் போது தொப்பி அணிந்து அல்லது குடை பிடிக்க மறக்க வேண்டாம்.

4. உங்கள் உடல்களிலிருந்து அதீதமாக வெளியாகும் வியர்வையால் நீங்கள் சோர்சடைய நேரிடும், இதை தவிர்க்க அதிகமாக நீராகரங்களை அருந்துங்கள், அனைத்து நீராகரங்களிலும் சிறந்தது தண்ணீரே. உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது சிறிது சிறிதாகவே விட்டுவிட்டு நீர் அருந்துங்கள்.

5. காஃபீன் ( caffeine ) கலந்துள்ள பானங்களை தவிர்த்து விடுங்கள் (காபி, டீ, மென் பானங்கள், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவை). இந்த பானங்கள் உங்கள் உடலிலிருந்து அதிகமான நீர்ச்சத்தை விரைவாக வெளியேற்றி சோர்வடையச் செய்துவிடும்.

6. சிலருக்கு மற்றவர்களை விட இயற்கையாகவே வியர்வை அதிகமாக வெளியாகும், அவர்களும் மிக அதிகமாக அவ்வப்போது தண்ணீர் அருந்த மறுக்க வேண்டாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...