Pages

Thursday, July 12, 2018

அதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழாவில் சாதனையாளர்கள் கெளரவிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 12
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் 2018-2019 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா சாரா திருமண மஹாலில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவிற்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் ஹாஜி எஸ்.எம் முகமது முகைதீன் தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். செயலர் எம்.அப்துல் ரஹ்மான் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லயன்ஸ சங்க மாவட்ட துணை ஆளுநர் எஸ். சேதுக்குமார் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதில், லயன்ஸ் சங்க அதிராம்பட்டினம் தலைவராக பேராசிரியர் ஹாஜி எம்.ஏ முகம்மது அப்துல் காதர், செயலராக எம். அப்துல் ரஹ்மான், பொருளாளராக எம்.ஏ அப்துல் ஜலீல் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

லயன்ஸ் சங்க புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட முன்னாள் ஆளுநர் ஆடிட்டர் சி.ராஜகோபால் பதவி பிரமாணம் செய்து வைத்து, சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில், அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள 5 அரசுப்பள்ளிகளுக்கு சுவர்க்கடிகாரங்கள், சைக்கிள் காற்று நிரப்பும் பம்ப் ஆகியன வழங்கப்பட்டன.

லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் கே.ஸ்ரீராம், வட்டாரத் தலைவர் எஸ்.துரைராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் இணைப்புரை வழங்கினார். மாவட்டத் தலைவர் எஸ்.பி. கணபதி சிறப்பு விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர்கள் எம். நெய்னா முகமது, ஜி.கே சுரேஷ், எம்.அகமது, எம்.சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில், சிறந்த மருத்துவ சேவைக்காக, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன், யுனானி மருத்துவர் சி.ஷெரின் பேகம், வலுதூக்கும் சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்ற கல்லூரி மாணவி எஸ்.லோகப்பிரியா, அதிக மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர் முகமது தமீம், சிறந்த சமூகப் பணிக்காக ஜித்தா தமிழ் சங்க நிறுவனர் ராஃபியா, அரசுப் பொதுத்தேர்வில் 100 சதவித தேர்ச்சி பெற்றுக்கொடுத்த ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதல்வர்  என்.உதயகுமார் ஆகியோருக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விழாவில், தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தை சேர்ந்த மறைந்த விவசாயி கிட்டுத்தேவர் கண்களை தானமாக வழங்கிய அவரது மருமகன்கள் செந்தில்குமார், முருகானந்தம் மற்றும் பேராவூரணி அருகே உள்ள மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராஜாம்பாள் அம்மையார் கண்களை தானமாக வழங்கிய அவரது மகன்கள் இ.வி ஏகாம்பரம், இ.வி சந்திரமோகன், இ.வி காந்தி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும், லயன்ஸ் சங்க மூத்த உறுப்பினர் பி.பிச்சைமுத்து அவர்களின் 20 ஆண்டுகால சேவையை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

விழா முடிவில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் ஹாஜி எம்.ஏ முகம்மது அப்துல் காதர் ஏற்புரை வழங்கினார். பின்னர், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல் நன்றி கூறினார். விழாவில் லயன்ஸ் சங்கத்தினர், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...