Pages

Wednesday, July 11, 2018

நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அமைந்துள்ள அரசு நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (11.07.2018) திடீர்  ஆய்வு மேற்கொண்டார்.

அணைக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலை கடையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்புகளை, வழங்கப்பட்டுள்ள விவரத்தின் பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். நியாய விலைக் கடையில் மொத்தம் எத்தனை குடும்ப அட்டைகள் உள்ளது என்பது குறித்தும், பொருட்கள் வாங்க வந்த பொது மக்களின்  குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையையும், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  ஒப்பிட்டு ஆய்வு செய்தார். பொது மக்கள் வாங்கும் அத்தியாவசியப் பொருட்களின் அளவுகள் சரியாக பதிவிடப்படுகிறதா எனவும், பொது மக்களுக்கு சரியாக அனைத்து பொருட்களும் கிடைக்கிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.  பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் போக மீதம் உள்ள இருப்பு சரியாக உள்ளதா என்பதை நியாய விலை கடை வைப்பறையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை அங்காடியிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி, வட்டாட்சியர் ராஜேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் சுசீலா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...