.

Pages

Wednesday, July 18, 2018

ஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்' வாசகர்களுக்கு நன்றி!

அதிராம்பட்டினம், ஜூலை 18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளின் அன்றாட நிகழ்வுகளை செய்திகளாக வழங்கும் சேவைக்காக தொடங்கப்பட்டது 'அதிரை நியூஸ்' இணையதள ஊடகம். செய்திகள் தயாரிப்பில் நீண்டகால அனுபவம் பெற்ற பங்களிப்பாளர்களால், உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை நடக்கும் அன்றாடச் செய்திகள் பிரத்தியோகமாக தயாரித்து, இத்தளத்தில் பதியப்பட்டு வருகிறது.

அதன் அடுத்தக்கட்ட சேவையாக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழ் சொந்தங்கள் உட்பட உலகளாவிய தமிழர்கள் பயன்பெறும் வகையில், அந்தந்தப் பகுதிகளில் நிகழும் அன்றாட முக்கிய நிகழ்வுகள், அந்தந்த நாட்டு அரசுகள் வெளியிடும் முக்கிய அறிவிப்புகள், நாடுகளின் சட்டதிட்டங்கள், பல்சுவை செய்திகள், புனிதமிகு ஹஜ் குறித்து பயன்தரும் செய்திகள், உலகச் செய்திகள், சுற்றுலா, வரலாற்றுச் செய்திகள் ஆகியவற்றை, ஆங்கில இணைய தளங்களை ஆதாரமாகக்கொண்டு, அதிரை மணத்துடன் 'நம்ம ஊரானால்' தமிழ் மொழி பெயர்ப்பு செய்து பகிரப்படுகிறது. இவை, ஆயிரக்கணக்கான வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், 'அதிரை நியூஸ்' தொடங்கிய காலம் முதல், தற்போது வரை பிரபலங்களின் தலையங்கம், பயன்தரும் மாவட்டச் செய்திகள், அறிவிப்புகள், கல்வி நிறுவனங்களில் நிகழும் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், உள்ளூர் சாதனையாளர்கள், புதிய தொழில் முனைவோர் ஊக்கிவிப்பு உள்ளிட்ட பல்வேறு செய்திகள் பதியப்பட்டு வருகிறது. இத்தளத்தில், பத்திரிகை துறையில் தொடர்புடையோர், எழுத்துத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்றவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சேவையாற்றி வருகின்றனர்.

உள்ளூரில் ஆர்வமுள்ள மாணவச் செய்தியாளர்கள் பலருக்கு இத்தளத்தில் பங்களிப்பாற்ற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் கற்கும் கல்வி, தொழில் போன்றவை பாதிக்காதவாறு சமூக நல சிந்தனை, நல்லொழுக்கப்பயிற்சி, எழுத்துப் பயிற்சி, செய்தி திரட்டும் திறன், மொழி பெயர்ப்பு பயிற்சி போன்றவை கற்பிக்கப்படுகின்றன. இதன்மூலம், தலைசிறந்த ஒரு ஊடகவியலாளராக எதிர்காலத்தில் வலம் வருவதற்கு இவை ஒரு தொடக்கமாக அமைகின்றன.

'அதிரை நியூஸ்' இணையதளச் சேவையை பொறுத்தவரை, எவ்வித லாப ~ நோக்கமின்றி பொதுநல சேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இத்தளத்தை பயன்படுத்தி விளம்பரங்கள் தேடுவதோ, அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. ஊடகத் துறையில் கால் பதிக்க நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், அவர்களின் ஊடக ஆர்வத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வித்திட்டு வருகிறது.

சரி விசயத்திற்கு வருவோம்...
'அதிரை நியூஸ்' இணையதள ஊடகத்தில் அன்றாடம் பதிந்து வரும் செய்திகளை பார்வையிடும் உலகளாவிய வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் இன்று (ஜூலை 18) ஒரு கோடியைத் தாண்டி சாதனை புரிந்துள்ளது என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

'அதிரை நியூஸ்' வாசகர்கள், கட்டுரையாளர்கள், பங்களிப்பாளர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து அளித்துவரும் ஆதரவும், ஊக்கமும் எங்களை மேலும் மெருகூட்டும். நன்றி.

~ அதிரை நியூஸ் 

5 comments:

 1. உங்கள் சமூகசேவை எழுத்துப்பணி மென்மேலும் தொடர்ந்து இன்னும் பலகோடி வாசகர்களை பெற்றிட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உங்கள் சமூகசேவை எழுத்துப்பணி மென்மேலும் தொடர்ந்து இன்னும் பலகோடி வாசகர்களை பெற்றிட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. கோடையில் கோடியை பெற்ற அதிரை நியூஸ் ஆசிரியருக்கு 1கோடி வாழ்த்துகள்
  நல்லதை நாடி, அல்லதை சாடி ஜாதி மதங்களை தாண்டி எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது அதிரை நியூஸ்

  மரணச்செய்தியை உடனுக்குடன் தந்த ஒரே இணையதளம் அதிரை நியூஸ்
  ஒருகோடி என்ன இன்னும் பலகோடியை காணப் போகிறது வாழ்த்துகள்

  ReplyDelete
 4. Assalamu alaikum nanbar shahulaipol aennudaiya sharaiyum uitthakkugiraen.

  ReplyDelete
 5. call 9942796441 to publish advertisement

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.