Pages

Saturday, July 7, 2018

அதிராம்பட்டினம் ரயில் நிலையம் ~ கட்டுமானப் பணிகள் நிலவரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 07
காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 2 ந் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை வாரம் (திங்கட்கிழமை, வியாழக்கிழமை) இருமுறை இயக்கப்பட்டு வருகின்றன. அதன் மற்றொரு வழித்தடமான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில், காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் அமைந்துள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் பற்றிய செய்தி துளிகள்...
1. பட்டுக்கோட்டை ~ அதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை செல்லும் பாதையில் தற்காலிக தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாதையில் கடந்த ஜூன் 23 ந் தேதி தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து டிராலியில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், வரும் ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் டெல்லியிலிருந்து சரக்கு ரயில் மூலம் 360 மீட்டர் நீளமுள்ள புதிய தண்டவாளங்கள் கொண்டு வரப்பட்டு பட்டுக்கோட்டை ~ அதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை செல்லும் பாதையில் பொருத்துவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

2. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 70 சதவித கட்டுமானப்பணிகள் தற்போது முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள யார்டு வடிகால், கார், சைக்கிள் பார்கிங், கழிவு நீர் வடிகால், நுழைவாயில் தரை தளம், நுழைவாயில் ஆர்ச், சாலை வசதி உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவுபெரும் என கூறப்படுகிறது.

3. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பிளாட் பார்ம்-1 ல் மேற்கூரை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேற்கூரையை தாங்கிப்பிடிக்கும் தூண்கள் நிலை நிறுத்தப்பட்டு, அதில், கிரேன் இயந்திரம் உதவியோடு பர்லின் ஷெல்டர் பொருத்தும் பணியில் டெக்னிஷியன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

4. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடை-1, நடைமேடை-2 ஆகியவற்றில் தளங்கள் அமைக்க காங்கிரட் சிமெண்ட் தட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

5. அதிராம்பட்டினம் நிலையம் அருகே கடலுக்கு செல்லும் சாலையில் ரயில்வே கேட் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

6. வாகன போக்குவரத்து நெருக்கடியை போக்க, அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையிலிருந்து (கல்லூரி முக்கம்) ஏரிபுறக்கரை (காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் சாலை) வழியாக ரயில் நிலையம் செல்வதற்கு கூடுதல் பாதையாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

7. அதிரை ரயில் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமானப்பணிகளை சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி  நிர்வாக பொறியியாளர்கள் பி. செல்வம், பூபதி ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.

அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
ஏ.சாகுல் ஹமீது
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...