Pages

Sunday, July 22, 2018

மல்லிபட்டினத்தில் மாற்றுத்திறனாளிகள் புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் (படங்கள்)

மல்லிபட்டினம், ஜூலை.22
கடலோர கிராம மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாகர்மாலா திட்டத்தை கைவிடவேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்க சிறப்பு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய சிறப்பு பேரவைக் கூட்டம் சனிக்கிழமை மாலை மல்லிப்பட்டினம் மூப்பனார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சேதுபாவாசத்திரம் ஹெச்.ஜமால்முகமது தலைமை வகித்தார். ஏ.யாகூப் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி  துவக்கவுரையாற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.பஹாத் முகமது வாழ்த்திப் பேசினார். தஞ்சாவூர் மாவட்டச்செயலாளர் பி.எம்.இளங்கோவன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து நிறைவுரையாற்றினார்.

கூட்டத்தில் ஒன்றியத்தலைவராக ஹெச்.ஜலீல் முகைதீன், செயலாளராக ரு.நூருல் அமீன், பொருளாளராக அ.யாகூப், துணைத்தலைவராக ஹெச்.ஜமால்முகமது, துணைச் செயலாளர்களாக எஸ்.செய்யது இப்ராகிம், எஸ்.அசன் மைதீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில், " மத்திய அரசு கொண்டு வந்துள்ள சாகர்மாலா திட்டத்தால் கடலோர கிராம மக்கள், பாரம்பரிய முறையிலான  எளிய மீனவர்கள், மீனவ தொழிலாளர்கள், கடல் தொழிலில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும். உதவித்தொகை கோரி மனு அளித்துள்ள 40 சதவீதம் ஊனமுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கவேண்டும். தஞ்சையில் நடைபெறவுள்ள மாவட்ட மாநாடு மற்றும் திருப்பூரில்  நடைபெறவுள்ள மாநில மாநாடு ஆகியவற்றில் சேதுபாவாசத்திரத்தில் இருந்து திரளானோர் சென்று கலந்து கொள்வது" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேதுபாவாசத்திரம் ஹெச்.ஜலீல் முகைதீன், ஹெச்.இப்றாகீம் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 6 பேருக்கு உடனடியாக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிறைவாக எஸ்.அசன் மைதீன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...