Pages

Wednesday, July 11, 2018

இந்தியர்கள் மணமுடிக்கும் வெளிநாட்டினர் விசா மீது இந்திய அரசு புது உத்தரவு!

அதிரை நியூஸ்: ஜூலை 11
வெளிநாட்டை சேர்ந்தவர்களை வெளிநாடுகளில் வைத்து மணமுடிக்கும் இந்திய ஆண் அல்லது பெண்ணிற்கு இந்தியாவில் ரெஸிடென்ட் விசா பெறுவதில் சிக்கல்கள் இருந்து வருகின்றன. வெளிநாட்டினரை இந்தியாவிற்குள் வைத்து திருமணம் செய்தால் மட்டுமே இந்திய ரெஸிடென்ட் விசா (X2 Visa) கிடைக்கும் மற்றவர்களுக்கு தற்காலிக டூரிஸ்ட் விசா மட்டுமே தரப்படும், டூரிஸ்ட் விசாவில் உள்ளவர்கள் அவ்வப்போது நாட்டை விட்டு வெளியேறிவிட்டு திரும்பவும் டூரிஸ்ட் விசாவிலேயே வர வேண்டியிருந்தது.

இந்தியர் ஒருவர் பிலிப்பினோ பெண் ஒருவரை வெளிநாட்டில் வைத்து திருமணம் செய்திருந்தார் ஆனால் அவருக்கு இந்திய ரெஸிடென்ட் விசா (X2 விசா) பெறுவதில் சிக்கல் நீடித்ததை தொடர்ந்து இந்திய அரசின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவிப்பின் அடிப்படையில், இந்தியாவுக்கு வெளியே வெளிநாட்டினரை திருமணம் செய்து கொள்வோர் இனி இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் இருக்கும் நிலையிலேயே ரெஸிடென்ட் விசாவிற்கு விண்ணப்பித்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

எனினும், இந்த புதிய சலுகை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சூடான், ஈராக், வெளிநாடுவாழ் பாகிஸ்தானிய குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் நாடாற்ற அகதிகள் ஆகியோருக்கு இச்சட்டம் பொருந்தாது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...