Pages

Sunday, July 8, 2018

பழைய தகர டின்களை செயற்கை கால்களாக பயன்படுத்திய சிரியா நாட்டு சிறுமிக்கு நற்செய்தி!

அதிரை நியூஸ்: ஜூலை 08
சிரியாவை ஆளும் பயங்கரவாதி அஸாத்தின் காட்டுமிரண்டி படைகள் தன் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ரஷ்யாவின் துணையுடன் இழைத்து வரும் கொடுமைகளால் சுமார் 11 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிற்குள்ளும் பல ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர், சிரியாவின் அண்டை நாடான துருக்கியிலும் சுமார் 3.5 மில்லியன் மக்கள் அகதிகளாக அடிப்படை வசதிகளற்ற தற்காலிக டென்ட்டுகளில் சொல்லெணாத் துயர்களுடன் காலந்தள்ளுகின்றனர்.

இயல்பான உடல்வாகு பெற்றவர்களே போர்க்கள பூமியிலும், அடைக்கல மண்ணிலும் ஒவ்வொரு நாளையும் கடத்துவது கஷ்டமெனும் போது பிறப்பில் கால்கள் இன்றி பிறந்தவர்களின் நிலை? பிறப்பிலேயே கால்கள் இல்லாமல் பிறந்த முஹமது மெர்ஹி அவர்களின் குழந்தை மாயா மெர்ஹி அவர்களும் அதே கால் குறைபாடுகளுடன் பிறக்க தந்தையாய் நொந்து போனார் ஆனால் தன் மகளை எப்படியாவது நடக்க வைத்துவிட வேண்டும் என அவரது உள்ளம் துடித்ததன் விளைவு, இட்லிப் (Idlib) நகர அகதி முகாமில் வீசியெறியப்பட்ட துண்டு பிளாஸ்டிக் குழாய்களையும் சில டூனா மீன் அடைத்து வைக்கப்பட்ட டின்களையும் சேகரித்து அவரே செயற்கை கால்களை உருவாக்கி தன் மகளுக்குப் பொருத்தி நடக்கவிட்டார்.

மாயா மெர்ஹி எனும் 8 வயது குட்டி தேவதை தகர டின்களால் உருவாக்கப்பட்ட கால்களுடன் தத்தி தத்தி நடந்து வரும் அழகை சமூக ஊடகங்கள் வழியாக உலகே கண்டு இரக்கம் கொண்டது, பல இதயங்கள் செய்த பிரார்த்தனையின் விளைவாய் துருக்கியின் இஸ்தான்பூல் நகரிலுள்ள ஒரு செயற்கை உடல் உறுப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அவளுக்கு நிஜமான செயற்கை கால்களை பொருத்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

தந்தை மகளை நடக்க வைக்க முயன்றார் அல்லாஹ் அதுபோலவே உதவினான், இன்ஷா அல்லாஹ் இன்னும் 3 மாத காலங்களில் மாயா மெர்ஹி அற்புதமாக நடக்கத் துவங்கிவிடுவாள் என பூரிக்கின்றார் துருக்கிய மருத்துவர் மெஹ்மட் ஜெகி கால்கு அவர்கள்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...