Pages

Monday, July 2, 2018

தடை செய்யப்பட்ட கடல் குதிரை வைத்திருந்தவர் கைது!

தஞ்சாவூர் ஜூலை.02
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட கடல் குதிரை, கடல் அட்டை ஆகியவற்றை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரம் பகுதியில் அரசால் கடலில் பிடிக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்ட அரிய வகை கடல் அட்டை, கடல் குதிரை, கடல் சங்கு போன்றவற்றை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக கடலோர காவல் குழுமத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடலோர காவல் குழும துணை கண்காணிப்பாளர் இளஞ்செழியன் உத்தரவின்பேரில், சேதுபாவாசத்திரம் கடலோர காவல் குழும ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில், உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் காவலர்கள் சேதுபாவாசத்திரம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது மல்லிப்பட்டினத்தை அடுத்த மனோரா பகுதியில் சாக்கு மூட்டையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் குதிரை 10,  கடல் சங்குகள் 223  ஆகியவை இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூபாய். 10,000 இருக்கும். அரிய வகை கடல் அட்டை, கடல் குதிரை, கடல் சங்கு போன்றவற்றை வாங்கி விற்பனை செய்வதற்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதனை பறிமுதல் செய்த கடலோர காவல் குழுமத்தினர், அதிராம்பட்டினம் பிள்ளைமார் தெருவைச் சேர்ந்த திலகர்ராஜ் எ மகன் ராஜேந்திரன் (வயது 61) என்பவரை கைது செய்து மேல் நடவடிக்கைக்காக பட்டுக்கோட்டை வனத்துறையிடம் ஒப்படைத்தனர் .

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...