Pages

Saturday, July 7, 2018

காவல்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரம் (படங்கள்)

தஞ்சாவூர் ஜூலை.07-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் காவல்துறையினர் சனிக்கிழமை அன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

வாகன ஓட்டுநர்கள் மற்றும் கார்களில் பயணிப்போர் அனைவரும் சீட் பெல்ட் அணியவேண்டும். இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும். காவல்துறையினர், அதிகாரிகள் என அனைவரும் இதனை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை சில தினங்களுக்கு முன் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன், உதவி ஆய்வாளர் இராமமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் அர்ச்சுனன் மற்றும் காவலர்கள் நடத்திய தணிக்கையின் போது உரிமம் இல்லாத வாகன ஓட்டிகள், மது அருந்தி விட்டும், தலைக்கவசம் அணியாதும் வாகனம் ஓட்டியோர், விதி மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களை, சிறுவர், சிறுமிகளை வாகனம் ஓட்ட பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. ஓட்டுநர் உரிமம், வாகனக் காப்பீடு, பதிவுப் புத்தகம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம். தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் வாகனத்தை இயக்க வேண்டும் என காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...