Pages

Monday, July 2, 2018

துபை ஜெபல் அலி Free Zone நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்தில் விசா!

அதிரை நியூஸ்: ஜூலை 02
துபையில் உள்ள ஜெபல் அலி ப்ரீ ஸோன் (Jebel Ali Free Zone - JAFZA) மற்றும் தேசிய தொழிற் பூங்கா (National Industrial Park - NIP) பகுதிகளில் சுமார் 7,500 பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் சுமார் 150,000 தொழிலாளர்களும் ஊழியர்களும் வேலை செய்கின்றனர். அதேபோல் துபையில் வெளிநாட்டினரால் செய்யப்பட்டுள்ள நேரடி முதலீடுகளில் சுமார் 20 சதவிகிதம் ஜெபல் அலியில் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் ஜெபல் அலிக்கு இடையே மட்டும் 3.4 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. மேலும் வாகன மற்றும் அதன் உதிரி பாகங்கள் வர்த்தகமும் 39.5 பில்லியன் திர்ஹத்திற்கு நடைபெற்றுள்ளது.

எனவே, நிறுவனங்கள் மேலும் இலகுவாக தங்களின் வர்த்தகங்களை மேற்கொள்ளும் பொருட்டு விண்ணப்பித்த 24 மணிநேரத்திற்குள் வேலைவாய்ப்பு விசாக்களை வழங்கிட துபை இமிக்கிரேசன் (The General Directorate of Residency and Foreign Affairs - GDFRA) மற்றும் ஜாஃப்ஸா (JAFZA) நிர்வாகத்திற்கும் இடையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...