Pages

Sunday, July 8, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் IAS / IPS பயிற்சி வகுப்பு தொடக்க விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 08
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் சென்னை எஸ்.ஆர்.கே - ஐ.ஏ.எஸ் அகதெமி இணைந்து நடத்திய குடிமைப் பணிகளுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு பயிற்சி வகுப்பின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு, கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் துவக்க உரை நிகழ்த்தினார். பயிற்சி வகுப்பின் ஒருங்கினைப்பளர்கள் பேராசிரியர் பி.குமாரசாமி, பேராசிரியை என்.சித்ரா ஆகியோர் அறிமுக உரை நிகழ்த்தினர். சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற காவல்துறைக் கண்காணிப்பாளர் ஏ. கலியமூர்த்தி கலந்துகொண்டு பேசுகையில்; மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பதவிகள் பெறுவதற்கு கடின உழைப்பு, விடா முயற்சி, உயரிய எண்ணம், பெற்றோரிடம் பணிவு, தாய்மை பற்று, கூர்ந்த எண்ணம், தன்னடக்கம் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்.

சிறப்பு விருந்தினராக, இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) தேர்வில் வெற்றி பெற்ற வி. கீர்த்திவாசன் கலந்துகொண்டு, மாணவர்கள் குடிமைப் பணிகளுக்கான தேர்வு எழுதும் வழிமுறை குறித்தும், அதில் எவ்வாறு வெற்றி பெறுவது குறித்தும் எடுத்துரைத்தார்.

முன்னதாக, கல்லூரி பொருளியல்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.பி கணபதி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியினை கல்லூரி ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர்கள் ஜி.ஆர் ஞானராஜா, ஐ.முகமது நாசர் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் சென்னை எஸ்.ஆர்.கே - ஐ.ஏ.எஸ் அகதெமி நிர்வாக இயக்குநர் ஏ.பாத்திமா பட்டோடி நன்றி கூறினார்.

 

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...