Pages

Saturday, July 7, 2018

TNCSC மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவராக அதிரை ஏ.பஹாத் அகமது தேர்வு (படங்கள்)

தஞ்சாவூர் ஜூலை.07-
தஞ்சாவூரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளின் தஞ்சை மாவட்ட கிளை அமைப்பு கூட்டம் மணிமண்டபம் அருகே  சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்த அமைப்பு கூட்டத்திற்கு ஏ.பஹாத் அகமது தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்  தஞ்சை மாவட்ட செயலாளர் பி.எம்.இளங்கோவன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

கூட்டத்தில் ஏ.பஹாத் அகமது தலைவராகவும், எஸ்.பாரதிதாசன் செயலாளராகவும், ஜி.சரவணன் பொருளாளராகவும், துணைத்தலைவர் மற்றும் சட்ட ஆலோசகராக பி.விஜயகாந்த், துணைச் செயலாளராக வி.சசிகுமார் ஆகியோரும் புதிய மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் கலந்து கொண்ட 40 பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், "2008 ஆம் ஆண்டு அரசாணை என் 151 ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியக்கூடிய, மாற்றுத்திறனாளிகள் பணி நிரந்தரப்படுத்தப் படவேண்டும்" என்ற அரசாணை இருந்தும், இதுவரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும், இதுவரை பணி நிரந்தரப்படுத்தப் படாமல் உள்ள,  பருவகால மாற்றுத்திறனாளி பணியாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, வரும் ஜூலை 16 ஆம் தேதி திங்கள்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு, கோரிக்கையை நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது" என தீர்மானிக்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...