Pages

Friday, August 17, 2018

அதிரையில் முஸ்லீம் லீக் சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி ரூ.38,420 திரட்டல்!

அதிராம்பட்டினம், ஆக.17
கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பணி அதிராம்பட்டினம் ஜூம்மா பள்ளிவாசல்களில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கேரளாவில் பெய்த பலத்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். அன்றாடப் பணிகள் முற்றிலும் முடங்கியது. இந்நிலையில், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் நிவாரண நிதி திரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை அதிரையில் உள்ள ஜும்மா பள்ளிவாசல்களிலும் நிதி திரட்டும் பணி நடந்தது.

அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் தலைமையில், அக்கட்சியினர் அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல், புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், ஏ.ஜே நகர் ஜும்மா பள்ளிவாசல் ஆகிய ஜும்மா பள்ளிவாசல்களின் முன்புற பகுதிகளில் நின்றுகொண்டு, தொழுகைக்கு வந்தவர்களிடம் துண்டு விரித்து ரூ.38,420 நிதியைத் திரட்டினர்.

இன்று (ஆக.17) திரட்டப்பட்ட நிதி அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்சி தலைமை மூலம் உடனடியாக விநியோகிக்க இருப்பதாக தெரிவித்தனர். இதில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப்,  பொருளாளர் ஏ.ஷேக் அப்துல்லா, துணைச் செயலாளர் அபூபக்கர், மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது, மாவட்ட ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஏ. சாகுல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டு நிதி திரட்டினர்.

 நாகை தொகுதி எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி வெள்ள நிவாரண நிதி அளித்த போது
 
 
புதுமனைத் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் திரட்டிய நிதி ரூ.20 ஆயிரத்தை தலைமை இமாம் நெய்னா முகமது ஆலிம், அதிரை பேரூர் தலைவர் கே.கே. ஹாஜா நஜ்முதீனிடம் வழங்கிய போது. அருகில் மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...