Pages

Saturday, August 11, 2018

காந்திநகர் தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 11
அதிராம்பட்டினம் காந்திநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்த குடிசை வீடுகள் எரிந்து சாம்பல். பாதிப்படைந்து குடும்பங்களுக்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கி ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காந்திநகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (35). மீனவர். இவர் தனது மனைவி மாலதி (30) மற்றும் பிள்ளைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். அதன் அருகே, மற்றொரு குடிசை வீட்டில் மாரியப்பன் தாய் வள்ளி (56) வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு மாலதி வீட்டில் திடீரென தீ பிடித்து எரிந்து சாம்பலானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொதுமக்கள் தீயை அணைத்தனர். பின்னர், பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் தீ பரவாமல் தடுத்தனர். வீட்டில் வைத்து இருந்த பணம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பள்ளிச் சான்றிதழ்கள், ஆடைகள் உள்ளிட்டவை தீயில் கருகியது.

தீ விபத்து குறித்து அறிந்ததும், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரண உதவியாக, ஒரு மாதத்திற்கு தேவைப்படும் மளிகைப் பொருட்கள், உயர் தர அரிசி, அடுப்பு, சில்வர், அலுமினியப் பத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கினர்.

இதில், ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கே முகமது சம்சுதீன், செயலாளர் இசட். அகமது மன்சூர், பொருளாளர் எஸ். சாகுல் ஹமீது, டி. முகமது நவாஸ்கான், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஆர். ஆறுமுகம், ஏ.எம் வெங்கடேசன், ஏ. அய்யாவு, எச் அன்வர் ரஹ்மான் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...