Pages

Saturday, August 11, 2018

TARATDAC மாவட்டத் தலைவராக அதிரை ஏ.பஹாத் முகமது தேர்வு (படங்கள்)

தஞ்சாவூர் ஆக.11-
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட மாற்றுத்திறனாளிகளுக்கு என 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் (TARATDAC) தஞ்சாவூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட மாநாடு, தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் ஆண்டாள் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் எஸ்.சிவப்ரியா தலைமை வகித்தார். தஞ்சை ஒன்றியச்செயலாளர் பி.சங்கிலிமுத்து வரவேற்றார். முன்னதாக  ஏ.பஹாத் முகமது மாநாட்டுக் கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணைச்செயலாளர் சி.ராஜன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட துணைத்தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சேகர், மாவட்ட துணைத்தலைவர் சி.கணேசன், மாவட்ட துணைச்செயலாளர் பி.கிருஷ்டி, தஞ்சை ஒன்றியத் தலைவர் எஸ்.சேகர் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். மாவட்டச்செயலாளர் பி.எம்.இளங்கோவன் வேலை அறிக்கை வாசித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் சாமி.நடராஜன், சிஐடியு
மாவட்டச்செயலாளர் சி.ஜெயபால், சிபிஎம் தஞ்சை ஒன்றியச்செயலாளர் எம்.மாலதி, அகில இந்திய ஜனநாயக மாதர்சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத்தலைவர்  கே.அபிமன்னன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், என்.சுரேஷ்குமார், மாணவர் சங்க மாவட்டச்செயலாளர் அரவிந்த்சாமி  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்க மாநில துணைத்தலைவர் டி.லெட்சுமணன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து நிறைவுரையாற்றினார். நிறைவாக முகமது ராவுத்தர் நன்றி கூறினார்.

நிர்வாகிகள் தேர்வு 
இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக ஏ.பஹாத் முகமது, மாவட்டச் செயலாளராக பி.எம். இளங்கோவன், மாவட்டப் பொருளாளராக சிவப்ரியா, துணைத்தலைவர்களாக கே.கிருஷ்ணமூர்த்தி, பி.சங்கிலிமுத்து, சி.கணேசன், சுகுமார், ரவி, துணைச் செயலாளர்களாக சி.ராஜன், ராமச்சந்திரன், கணேஷ், செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானம் 
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே போட்டியிடும் வகையில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு என ஒதுக்க வேண்டும். தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக உள்விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும். பூதலூர், திருவையாறு, பேராவூரணி உள்ளிட்ட  வட்டாட்சியர் அலுவலகங்களில்  உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகங்களை மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல எளிதாக  தரைத்தளத்திற்கு மாற்ற வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை இல்லை என மறுக்காமல் வழங்க வேண்டும். வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க கடன் உதவி வழங்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு பணி இடங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் பணியாற்றும்  பருவகால மாற்றுத்திறனாளிகள் பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சாகர்மாலா திட்டத்தால் கடலோரக் கிராம மக்கள், பாரம்பரிய முறையிலான எளிய மீனவர்கள், மீனவத் தொழிலாளர்கள், கடல் தொழில் மற்றும் துணைத் தொழில்களில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...