Pages

Sunday, August 5, 2018

அதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை (WCT) அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.05
'நீராதாரம்', உயிராதாரம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் நீர் நிலைகள் பாதுகாப்பு, அதன் பரமாரிப்பு, அவற்றை மேம்படுத்தும் சேவைகளுக்காக தொடங்கப்பட்ட அமைப்பு 'நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை' (WCT). இந்த அமைப்பின் ஆலோசனைக்கூட்டம், அதிராம்பட்டினம் ஆயிஷா மகளிர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கூட்டத்தில், நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை' (WCT) நோக்கம், அதன் செயல் திட்டங்கள் பற்றி எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்) எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பின் பேரில், நசுவினி ஆறு படுக்கை அணை விவசாய சங்கத் தலைவர் வீரசேனன் கலந்துகொண்டு நீர் நிலை பாதுகாப்பின் அவசியம் பற்றி பேசினார்.

கூட்டத்தில், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளுக்கு ஆற்று நீர் வழங்கக் கோரி விவசாயிகள் சார்பில் பட்டுக்கோட்டையில் நாளை திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்பது எனவும், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வறண்டு காணப்படும் ஏரி, குளங்களுக்கு முறை வைக்காமல் ஆற்று நீர் திறந்துவிடக்கோரி, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கடந்த ஜூலை 23 ந் தேதி கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், ஆற்று நீர் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 13-08-2018 அன்று திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மீண்டும் முறையிடுவது எனவும், இந்திய சுதந்திர தினத்தையொட்டி, நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், இந்திய தேசியக் கொடி ஏற்றி வைத்து, மரக்கன்றுகள் நடுவது என தீர்மானிக்கப்பட்டன. மேலும், அதிராம்பட்டினம் பகுதியின் பொதுநலன் கருதி, தனது வாட்டர் உற்பத்தி நிலையத்தை மூடிவிட்ட சகோதரர் ஹாஜி  எம்.எஸ் முகமது அலி அவர்களின் உயர்ந்த எண்ணத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஏ.எஸ் அஹமது ஜலீல் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை ஏ.சாகுல் ஹமீது தொகுத்து வழங்கினார். கூட்ட முடிவில். எம். அகமது சிராஜுதீன் நன்றி கூறினார்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பின் பேரில் கலந்துகொண்ட வீரையன், மருதையன், தவமணி, ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சால்வை அணித்து நன்றி தெரிவிக்கப்பட்டன. இக்கூட்டத்தில், 100 க்கும் மேற்பட்ட அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
 

1 comment:

  1. ரொம்ப பேருக்கு ஊரில் வேலையில்லை என்பது மட்டும் உண்மை., புதிதாக அமைப்பு வருவதும் அதேவேகத்தில் காணாமல் போவதும் பொதுமக்கள் பார்க்கிறார்கள். நீர்நிலைகளை பாதுகாக்க குளம் ரொம்பமுக்கியம்., மழைநீருக்கு பதிலாக சாக்கடை தான் குளத்தை நோக்கி வருது அல்லது பிளாஸ்டிக்கால் வடிகால் சேதமடைந்துள்ளது இதனை எல்லோரும் உணர்ந்தால் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை குறைக்கலாம். மாடு இலைக்கு பதிகளாக பிளாஸ்டிக்கை சாப்பிடுவதை குப்பை மேட்டில் பார்க்கலாம்., எந்த தெருவில் குப்பை வாசனை வீசவில்லை .., மெயின் ரோட்டில் மட்டும் குப்பையை அள்ளுகிறவர்கள் தெருவின் சந்தில் வருவதில்லை., அதனை கண்டிக்க பொதுமக்களுக்கு நேரமில்லை.

    கடையில் வியாபாரமில்லாவிட்டால் கடையை மூடுவது தானே வழக்கம்., அதற்கும் நன்றியா.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...