Pages

Sunday, September 9, 2018

அதிராம்பட்டினத்தில் 25 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்!

அதிராம்பட்டினம், செப்.09
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தப்பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம்,  அதிராம்பட்டினத்தில் உள்ள நடுத்தெரு வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,  மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காதிர் முகைதீன் ஆண்கள் / பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், கடற்கரைதெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி (1 ம் நம்பர்  பள்ளிக்கூடம்), கரையூர் தெரு ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி, வள்ளியம்மை நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளிட்ட 25 வாக்குச்சாவடிகளில் இன்று (செப்.09) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்காக 01-09-2018 முதல் 31-10-2018 வரை வைக்கப்பட்டிருக்கும், இந்த நாட்களில் 01-01-2019 அன்று 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் (அதாவது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிராத 01-01-2001க்கு முன்பு பிறந்தவர்கள் அனைவரும்) விண்ணப்பிக்கலாம்.

இவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் மேற்குறிப்பிட்ட காலத்தில் (01-09-2018 முதல் 31-10-2018 வரை) படிவம் எண் 6 ஐ பெற்று பூர்த்தி செய்து வயது மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவண நகல்களை இணைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமே அளித்திடலாம்.  01-01-2019 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைவரும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் புதிதாக பெயர் சேர்க்க படிவம்  6 ஐயும் (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A மூலம்), பெயர் நீக்கம் செய்திட படிவம் 7 ஐயும். பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொண்டிட படிவம் 8 ஐயும். ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A ஐயும் பூர்த்தி செய்து உரிய சான்றவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலரிடமே அளிக்கலாம்.

01.09.2018 அன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம சபைகளிலும்.  உள்ளாட்சி அமைப்புகளிலும் வாக்காளர்களின் பார்வைக்காக 08-09-2018, 22-09-2018, 06-10-2018 மற்றும் 13-10-2018 ஆகிய நாட்கள் வைக்கப்பட்டிருக்கும்.

மேலும், வருகிற 09-09-2018, 23-09-2018, 07-10-2018 மற்றும் 14-10-2018 ஆகிய நான்கு நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அந்நாட்களிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  எனவே, மேற்குறிப்பிட்ட சிறப்பு முகாம் நாட்களை பயன்படுத்தி பொது மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேவையான தேர்தல் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.  தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் இடம் பெறதவர்கள் இடம் பெறவும். உரிய திருத்தம் மேற்கொண்டிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

01-09-2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு (Claims & objections) தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் ( EROs ) தகுதி அடிப்படையில் ஒப்பளிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டு. வருகிற 04-01-2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர் தவறு ஏதுமின்றி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்திடவும், தவறு ஏதுமிருப்பின் அவற்றை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தேவைப்படும்  சான்றவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கி நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க. நீக்க. உரிய மாற்றங்கள் மேற்கொள்ள வாக்காளர்கள் நேரடியாக உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்க இயலாவிடில், www.elections.tn.gov.in என்ற இணைய தள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...