Pages

Friday, September 14, 2018

தஞ்சை மாவட்டத்தில் பட்டாசுகள் சில்லரை விற்பனை செய்திட தற்காலிக உரிமம் பெற செப்.28 க்குள் விண்ணப்பிக்கலாம்!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசுகள் சில்லறை விற்பனை செய்திட தற்காலிக உரிமம் பெறுவதற்கு பின்வரும் வெடிபொருட்கள் விதிகள் 2008ன்படி உரிய ஆவணங்களுடன் 28.09.2018க்குள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல்.

இதுகுறித்து இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
2018-2019 ஆண்டிக்கான வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது  வருவாய்த்துறை அமைச்சர் அவர்களால் சட்ட மன்ற பேரவை கூட்டத் தொடரில் 27.0.2018 அன்று வருவாய்த்துறை சார்பாக 24 சேவைகள் கணிணி இணைய வழி மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் பேரில் அதன் ஒரு பகுதியாக வெடிபொருள் சில்லரை விற்பனைக்கான தற்காலிக உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களையும் கணிணி இணைய வழி மூலமாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் சில்லரை விற்பனை செய்திட தற்காலிக உரிமம் பெறுவதற்கு பின்வரும் வெடிபொருள் விதிகள் 2008ன்படி உரிய ஆவணங்களுடன் 28.09.2018க்குள் நேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது தீபாவளி பண்டிகை முன்னதாக 20.10.2018க்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 28.09.2018க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...