Pages

Friday, September 7, 2018

மமக அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டுக்கு அதிரையிலிருந்து 30 வாகனங்களில் செல்ல தீர்மானம்!

அதிராம்பட்டினம், செப்.07
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயல்வீரர்கள் கூட்டம் அதிரையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தை, ஜாகிர் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். கூட்டத்திற்கு, தமுமுக/மமக அதிரை பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். தமுமுக/மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக அதிரை பேரூர் செயலாளர் எம்.ஆர் கமாலுதீன் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் அக்டோபர் 7ஆம் தேதி அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில், அதிராம்பட்டினம் பகுதியில் இருந்து சுமார் 30 க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொதுமக்களை அழைத்து செல்ல தீர்மானிக்கப்பட்டன. மேலும், அழைப்புப்பணிக்காக மேற்கொள்ள இருக்கும், வாகனப் பிரச்சாரம், பிளக்ஸ் பேனர்கள், வால்போஸ்டர், துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன. தமுமுக - மமக தோழமை கட்சிகள், சமுதாய அமைப்புகள், ஜமாத்தார்கள் ஆகியோருக்கு அழைப்பிதழ்கள் வழங்குவது குறித்து பேசப்பட்டன.

முன்னதாக கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக மமக திருச்சி மாவட்ட செயலாளர் ஹுமாயூன் கபீர், மமக மாநில பேச்சாளர் உதுமான் அலி ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தனர். முடிவில், மமக அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது நன்றி கூறினார். இக்கூட்டத்தில், தமுமுக, மமக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தமுமுக/மமக அதிராம்பட்டினம் நிர்வாகிகள் கூறியது;
'இந்திய அரசியலமைப்பு சட்டமானது வேற்றுமையில் ஒற்றுமை காணும் வகையில் நாட்டின் பன்மை பண்பாடுகளை அங்கீகரித்து, பல்வேறு மத, மொழி, கலாசார பண்பாடுகளையும் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. மாநிலங்களுக்கு அதிகாரங்களை அளித்து மத்தியிலும் கூட்டாட்சி தத்துவத்தை அங்கீகரித்து வந்தது.

இந்தநிலையில், ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி, ஒரே சட்டம் என்ற பெயரால் நாட்டின் பன்மை பண்பாடுகளை சீர்குலைக்கும் பணிகள் அதிவேகமாக நடந்து வருகின்றன. மாநில உரிமைகளை பறித்து மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன.

அரசியலமைப்பு சட்டத்தின் பண்பாட்டு விழுமியங்களை ஒவ்வொன்றாக பறிக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. எனவே, அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஓரணியில் திரட்டும் வகையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநாடு திருச்சியில் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. என்றனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...