Pages

Saturday, September 15, 2018

தஞ்சாவூரில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற புதிய கட்டடப் பணிகள் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற புதிய கட்டடம் ரூ.3539 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருவதைனையும், காவிரி வெண்ணாறு, கல்லணைக் கால்வாய்களில் தண்ணீர் செல்வதனை  பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (15.09.2018) நேரில் பர்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை உடன் இருந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.3539 இலட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் புதிய கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் தரை தளத்தில் 63,270 சதுர அடியில் 9 நீதி மன்றங்களும், முதல் தளத்தில் 29,376 சதுர அடியில் 9 நீதி மன்றங்களும், இரண்டாம் தளத்தில் 63,270 சதுர அடியில் ஏனைய அலுவலகங்களும் என மொத்தம் 1,55,916 சதுர அடியில் ஒருங்கிணைந்த 18 நீதி மன்றங்கள் கட்டப்பட்டு வருகின்றது. இந்நீதிமன்ற பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும், ஒப்பந்தாரர்களுக்கும் அறிவுறுத்தினார்.

முன்னதாக, பொதுப்பணித்துறை திட்ட இல்லத்தில்  கல்லணையிலிருந்து கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவதை நீர் அளவு குறித்தும், வெண்ணாறு மற்றும் காவிரி ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீர் அளவு குறித்தும், பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் அரசு முதன்மை செயலாளர் அவர்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து வெண்ணாறு தலைப்பு, வெட்டாறு தலைப்பு, திருக்காட்டுப்பள்ளியில் காவிரி, குடமுருட்டி தலைப்பு, மானஞ்சேரியில் காவிரி,  வீரசோழனாறு தலைப்பு, காவிரி அரசலாறு தலைப்பு, புனவாசல் வாய்க்கால், நந்தி வாய்க்கால், கண்டிதம்பட்டில் கல்லணை கால்வாயிலிருந்து கல்யாணஓடை தலைப்புää குளமங்கலம் காட்டூர் கால்யாணஓடை வாய்க்கால் தண்ணீர்; செல்வதனை ஆய்வு செய்து ஆறுகள் மற்றும் கால்வாய்களில்; தண்ணீர் திறக்கப்பட்டுள்ள அளவு குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் அரசு முதன்மை செயலர் அவர்கள் கேட்டறிந்தார். கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்திட பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது சிறப்பு தலைமை பொறியாளர் (திருச்சி) பாலசுப்ரமணியன்,  பொதுப்பணித்துறை (கட்டடம்) செயற்பொறியாளர் ரவிமனோகர், உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி செயற்பொறியாளர் முத்தையா தலைமை பொறியாளர் செந்தில்குமார், சிறப்பு தலைமைப் பொறியாளர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை (நீர்வளம்) கோட்ட செயற்பொறியாளர்கள் முகமது  இக்பால் (காவிரி), அசோகன் (வெண்ணாறு), திருவேட்டைசெல்வம் (அக்னியாறு), முருகேசன் (கல்லணைக் கால்வாய்), உதவி செயற்பொறியாளர் சண்முகவேல், உதவி பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...