.

Pages

Saturday, September 22, 2018

புனித கஃபாவில் 40 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய துயரம் ~ ஓர் நினைவலை!

அதிரை நியூஸ்: செப். 22
ஹிஜ்ரி 1400 வருடம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமான முஹர்ரம் மாதத்தின் முதல் நாள் அதிகாலை அதாவது 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி சுபுஹூ (ஃபஜர்) நேரம் 5.25 மணி திடீரென ஒரு பயங்கரவாத கும்பல் புனித கஃபத்துல்லாஹ்வை துப்பாக்கி முனையில் கைப்பற்றுகின்றனர், அவர்களுக்கு ஊட்டப்பட்ட ஓர் தவறான நம்பிக்கையின் காரணமாக!

24 மணிநேரமும் தொழுகையாளிகளால், உம்ரா பயணிகளால், தவாப் சுற்றுபவர்களால் வணக்க வழிபாடுகளால் சூழ்ந்திருக்கும் அல்லாஹ்வின் ஆலையத்தில் பாங்கொலி உட்பட அனைத்தும் நிறுத்தப்படுகின்றது மாறாக துப்பாக்கி குண்டுகள் முழங்குகின்றன, புகை சூழ எங்கெங்கும் பக்தர்களின் மரண ஓலங்கள், காயமடைந்தவர்களின் கண்ணீர் குரல்கள் என 15 நாட்களுக்கு நீடிக்கின்றது இந்த அவலம்.

இங்கே இஸ்லாத்தின் பெயரால் சுட்டவர்களும் இஸ்லாமியர்கள் சுடப்பட்டவர்களும் இஸ்லாமியர்கள். இந்நிலையில் அன்றைய சவுதி மன்னர் காலித் இப்னு அப்துல் அஜீஸ் அவர்களும் மக்கா நகருக்கு வருகை தருகின்றார், நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து உலமாக்களிடம் ஆலோசணை பெற்று அவர்கள் தந்த மார்க்கத் தீர்ப்பின் அடிப்படையில் ஒரு மெகாபோன் மூலம் குற்றவாளிகள் சரணடைய அழைப்பு விடுக்கப்படுகின்றது. மேலும் குர்ஆனிலிருந்தும் அவர்களின் செயல்களுக்கு எதிரான வாசகங்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றது ஆனால் அன்றைய ஆட்டு மந்தைகளின், தனி மனித அடிமைகளின் காதுகளில் விழவேயில்லை.

இறுதியாக, சவுதி அரேபியாவின் பாதுகாப்பு படையினர் அதிரடியாக ஜூஹைமன் அல் ஒதைபி (Juhayman Al Otaibi) என்பவர் மீதும் அவரது தீவிரவாத சீடர்கள் மீதும் தாக்குதல் நடத்தி புனித கஃபத்துல்லாஹ்வை மீட்கின்றனர். ஜூஹைமன் அல் ஒதைபியும் அவனது சகாக்களில் பலரும் உயிருடன் பிடிபடுகின்றனர் அதேவேளை 117 பேர் அவனது ஆட்கள் ராணுவத் தாக்குதலில் உயிரைவிட்டிருந்தனர். பிடிபட்டவர்களில் 69 பேர் ஒரு மாத காலத்திற்குள் விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். 19 பேர் சிறை தண்டனை பெற்றனர்.

பிடிபட்ட வழிகெட்ட கொள்கையின் தலைவன் ஜூஹைமன் அல் ஒதைபியிடம் அன்றைய இளவரசர் சவூது அல் பைசல் அவர்கள் ஏன் இவ்வாறு செய்தாய் என வினவியபோது 'ஷைத்தான் என்னை வழிகெடுத்துவிட்டான்' என தெளிவாக ஒப்புக் கொண்டான் ஆனால் இன்றைய வழிகேடர்கள்?

கஃபத்துல்லாஹ் மீட்பு நடவடிக்கையின் போது சவுதி பாதுகாப்பு படையினர் 127 பேரும் பொதுமக்கள் 26 பேரும் ஷஹீதானார்கள் அதேபோல் சவுதி பாதுகாப்பு படைவீரர்கள் 462 பேரும் பொதுமக்களில் 109 பேரும் காயமடைந்தனர்.

ஜூஹைமன் இந்த இரத்தக்களரியை நிகழ்த்திய போது 1 வயது குழந்தையாக இருந்த அவரது மகன் ஹாத்தல் இப்னு ஜூஹைமன் அல் ஒதைபி (Hathal bin Juhayman Al Otaibi) தற்போது சவுதி ராணுவத்தில் சமீபத்தில் கர்னலாக (Colonel) பதவி உயர்வு பணியாற்றி வருகிறார். தந்தையை போல் மகனில்லை என்பது போலவே தந்தையின் குற்றத்திற்காக மகன் அரசால் பழிவாங்கப்படவுமில்லை.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.