.

Pages

Monday, September 17, 2018

அதிராம்பட்டினம் கடைமடைக்கு தண்ணீர் கேட்டு 600 பேர் ஒன்று திரண்டு ஆட்சியரிடம் கோரிக்கை (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.17
அதிராம்பட்டினம் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கேட்டு 600 பேர் ஒன்று திரண்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் குளங்கள், ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால், இப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. இவற்றை, தவிர்க்கும் வகையில், குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை மட்டும் முழுமையாக நம்பியுள்ள அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதிக்கு, தாமதமின்றி, முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடந்த ஜூலை 23, ஆகஸ்ட் 13 ஆகிய தேதிகளில் இருமுறை மனுக்கள் அளித்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக பலதடவைகள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படததால், நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில், அதிராம்பட்டினம் கடைமடைப்பகுதி விவசாயிகள், நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், மீனவர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் என சுமார் 600 பேர் ஒன்று திரண்டு, மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் 3-வது முறையாக இன்று (செப்.17) திங்கட்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்டு, அடுத்த வாரத்தில் அதிராம்பட்டினம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும், முதற்கட்டமாக 5 குளங்களுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். மேலும், அதிராம்பட்டினம் பகுதியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அதிராம்பட்டினம் அருகில் உள்ள தொக்காலிக்காடு மகாராஜா சமுத்திர அணையிலிருந்து கடலுக்கு வீணாக வெளியேறும் நீரை பம்பிங் மூலம் அதிராம்பட்டினம் பகுதிக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை செயல்படுத்துமாறு ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

செய்தி துளிகள்:
1. அதிராம்பட்டினம் கடைமடைக்கு தாமதமின்றி தண்ணீர் திறந்துவிடக்கோரி 30 வேன், 6 கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆட்சியரகத்திற்கு பயணமானார்கள்.

2. பெண்களுக்கு தனியாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

3. இதில், அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத் நிர்வாகிகள், கரையூர் தெரு, காந்தி நகர், மிலாரிக்காடு உள்ளிட்ட கிராம நிர்வாகிகள் பலர் இடம்பெற்றனர். குறிப்பாக, அரசியல் கட்சி பிரமுகர்கள், அனைத்து  இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், மஹல்லா இளைஞர்கள் மற்றும் கிராம பஞ்சாயத் இளைஞர்கள் பலர் ஆர்வமாக கலந்துகொண்டனர்.

4. இதில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சீனியர் சிட்டிசன்கள் பலர் பங்கேற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

5. ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளிக்கும் அழைப்பு பணிக்காக ஒலிப்பெருக்கி, துண்டு பிரசுரங்கள் விநியோகம், ஜும்மா பள்ளிவாசல்களில் தொழுகையில் பொது அழைப்பு, கிராம பஞ்சாயத்தார் மூலம் பொது அழைப்பு, சமூக வலைத்தளங்கள், நேரிலும், தொலைப்பேசியிலும் அழைப்பு விடப்பட்டது.

6. தஞ்சை புறப்படுவதற்கு முன்னதாக அனைவருக்கும் லாவண்யா திருமண மஹாலில் காலை சிற்றுண்டி உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

7. அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை ஒன்று திரண்டு அமைதியான முறையில், அழுத்தமாக பதிவு செய்த விதம் ஆட்சியரக அலுவலர்கள், காவல்துறையினர் மத்தியில் ஊரின் மாண்பை உயர்த்திக்காட்டியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.