Pages

Tuesday, September 11, 2018

வடகிழக்குப் பருவமழை: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை!

வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் அவர்கள்  தலைமையில்  அனைத்துத் துறை முதன்மை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (11.09.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது :- 
வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை  தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழையினையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட செய்து முடிக்க வேண்டும். ஒரு வருடத்தில் வருகின்ற மழையளவில் 48 சதவிகித மழை வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கின்றது.  வடகிழக்கு பருவ மழையின் போது பொது மக்கள் வெள்ள சேதம் மற்றும் இதர புகார்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகளை சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  மாநகராட்சி பகுதியில் பாலங்கள் மற்றும் சாலைகள் பழுதடைந்திருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது அதனை வெளியேற்ற மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் கொசு முட்டைகள் உற்பத்தியாகாத வண்ணம் தூய்மை செய்தல் வேண்டும். நீரினால் பரவும் நோய்களை தடுக்க தேவையான அளவு குளோரின் கலந்த நீரினை மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்தல் வேண்டும். 

தீயணைப்புத் துறையினர் வெள்ளக் காலங்களில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  பருவ மழை காலத்தில் ஏற்படும் சேதங்கள் குறித்த கணக்குகளை வருவாய் துறையினர் பதிவு செய்ய வேண்டும்.  நிவாரண மையங்களான மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அரசு பள்ளிகள், சமுதாய கூடங்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொது மக்களுக்கு உடனுக்குடன் மருத்துவ வசதி செய்வதற்கு சுகாதாரத்துறையினர் ஆம்புலன்ஸ் உடன் கூடிய  மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  போதுமான அளவு மருந்துகள் மற்றும் விஷ முறிவு மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்திட உரிய பணியாளர்களுடன் ஜேசிபி இயந்திரங்கள்ää மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுப்பணித்துறையினர் ஏரிää குளம்ää வாய்க்கால் ஆகியவற்றில் ஆக்ரமிப்புகளை செய்யப்பட்டிருந்தால் உடனடியாக ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். நெடுஞ்சாலைத்துறைää உள்ளாட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாலங்கள், தரைபாலங்கள் ஆகியவற்றை தண்ணீர் தேங்கா வண்ணம் முன்னுரிமை அடிப்படையில் அவற்றை தூர்வாரி தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

உணவு பொருள் வழங்கல் துறையினர் மழைக் காலங்களில் தேவைப்படும்  அரிசி, பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

மீன்வளத்துறையினர்  படகுகளின் உரிமையாளர்களின் விவரங்கள் மற்றும் கைபேசி எண் குறித்த விவரங்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.  அரசு போக்குவரத்துக் கழகம் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல ஏதுவாக அரசு பேருந்துகளை உடனுக்குடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கால்நடை துறையினர் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் மருந்து மாத்திரைகள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிக் கல்வி துறையினர் மழை காலங்களில் பொது மக்களை பள்ளிகளில் தங்க வைக்க அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்

வடகிழக்கு பருவ மழையின் போது அனைத்துத்துறை அலுவலர்களும் அந்தந்த துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை செய்து முடித்து வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பேசினார்.

இக்கூட்டத்தில் அனைத்துத் துறை முதன்மை அலுவலர்கள் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...