Pages

Sunday, September 9, 2018

ரோட்டரி சங்கம் சார்பில் கை கழுவும் முறை குறித்து பள்ளி மாணவர்களுக்கு செயல் விளக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கை கழுவும் முறை குறித்து செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி தலைமை வகித்தார். பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் எஸ். நாகராஜன் வரவேற்றுப் பேசினார்.

ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கே முகமது சம்சுதீன், செயலாளர் இசட். அகமது மன்சூர், பொருளாளர் எஸ். சாகுல் ஹமீது ஆகியோர் கை கழுவும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். முடிவில், ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் டி. முகமது நவாஸ்கான் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கிரிமி நாசினி, சோப், டவல் வழங்கப்பட்டன. இதில், ரோட்டரி சங்கத்தினர், பள்ளி ஆசிரியர்கள். மாணவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...