Pages

Saturday, September 15, 2018

பம்பிங் நீர் கொண்டுவர: வண்டிப்பேட்டை ~ காட்டுக்குளம் இடையே அளவீடு பணி தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.15
அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பகுதியில் அமைந்துள்ள காட்டுக்குளத்திற்கு பம்பிங் மூலம் நீரை கொண்டு வருவதற்காக, சுமார் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் வண்டிப்பேட்டை முதல் காட்டுக்குளம் வரையில் குழாய்கள் புதைக்கும் பணிக்கான திட்டம் கடந்த  2015-2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட இப்பணியை உடனடியாக தொடங்கக் கோரி, நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், கடந்த ஆக.13 ந் தேதி மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வண்டிப்பேட்டை முதல் காட்டுக்குளம் வரையில் குழாய்கள் புதைக்கும் பணிக்காக முதல்கட்டமாக அளவீடு பணி இன்று சனிக்கிழமை காலை தொடங்கியது. பணியில், பேரூராட்சி மேற்பார்வையாளர் (பொறியாளர் பிரிவு) ஆர்.ராமலிங்கம் தலைமையில், தொழில்நுட்ப உதவியாளர் தீன் முகமது மற்றும் பணியாளர்கள் இப்பகுதியை அளவீடு செய்தனர். அப்போது, நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் உடன் இருந்தார்.

சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில், சுமார் 1 கிலோ மீட்டர் நீளத்தில் குழாய்கள் புதைக்கும் பணி விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...