Pages

Wednesday, September 5, 2018

கீழத்தோட்டத்தில் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி ஒத்திகை (படம்)

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையிலிருந்து பட்டுக்கோட்டை வட்டம், ராஜாமடம் ஊராட்சி கீழத்தோட்டத்திலும் மற்றும் பேராவ10ரணி வட்டம், திருவத்தேவன் ஊராட்சி சோமநாதன்பட்டினத்திலும் மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி ஒத்திகையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (05.09.2018) ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டம், ராஜாமடம், கீழத்தோட்டம் பகுதியிலும், பேராவூரணி வட்டம் திருவத்தேவன், சோமநாதன்பட்டினம் பகுதியில் சுனாமி குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  காலை 8.30 மணியளவில் இந்தோனேசியா வடக்கு சுமத்திரா தீவில் 8.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதென சுனாமி ஒத்திகை நிகழ்ச்சிக்கான செய்தி பெறப்பட்டுள்ளது. செய்தியின் அடிப்படையில் கீழத்தோட்டத்திலும், சோமநாதன்பட்டினத்திலும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி மூலமாக உண்மையான சுனாமி ஏற்படும் பொழுது தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, தங்கள் உடமைகள் எவ்வாறு பாதுகாத்து கொள்வது தொடர்பான பொது மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தப்படவுள்ளது. நிகழ்ச்சியில் பொது மக்கள் கலந்து கொண்டு அலுவலர் அறிவுரையை பெற்று தயார்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

 முன்னதாக சுனாமி வரும்பட்சத்தில், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலம் சுனாமி எச்சரிக்கை முன்னறிவிப்பு பெறப்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சுனாமி கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் திரு.தனபாலன் (பொ), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் கண்ணன், காவல் துறை அலுவலர்கள், தீயணைப்பு துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...