தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பொது மக்கள், மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், பேருந்து பயணிகள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் ஆகியோரிடம் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம் 09.09.2018, 23.09.2018, 07.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 01.01.2001க்கு முன்பு பிறந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு இம்முகாம் நடைபெறும் நாட்களில் விண்ணப்பம் செய்யலாம். தஞ்சாவ10ர் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடி மையங்களான 2,287 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் பொது மக்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான விண்ணப்பத்தை நேரில் அளிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, தஞ்சாவூர் தென் கீழ் அலங்கம் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியிலும், மருங்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும், செங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், வளம்பக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை நேரில் ஆய்வு செய்து, பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய வந்த பொது மக்களிடம் உரிய விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் (பொ) காளிமுத்து, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர்கள் அருணகிரி, (தஞ்சாவூர்), இளங்கோ (பூதலூர்) ஆகியோர் உடன் இருந்தனர்.
This comment has been removed by the author.
ReplyDelete