Pages

Monday, September 3, 2018

மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் சிறுபான்மையின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு!

மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல்.

தஞ்சாவூர் மாவட்டம், மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது : -
சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்த கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கி கல்வியை தொடர முடியாத பள்ளி மாணவிகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் “பேகம் ஹஸரத் மஹால் தேசிய கல்வி உதவித் தொகை” திட்டம் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிறுபான்மையின பள்ளி மாணவிகள் www.maef.nic.in என்ற இணைய தளத்தில் 15.09.2018க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஏற்கனவே மத்திய மாநில அரசின் திட்டங்களின் மூலம் கல்வி உதவித்தொகை பெற்றிருப்பின், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது.  இத்திட்டத்தின் கீழ் 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ரூ.10,000மும், 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ரூ.12,000மும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டம் குறித்த மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டிட முதல் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...