Pages

Tuesday, September 11, 2018

ஏரிப்புறக்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கல்!

அதிராம்பட்டினம், செப்.11
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஐ.மகாலட்சுமி தலைமையில் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சக்கர நாற்காலி கேட்டு விண்ணப்ப மனுக்கள் அளித்து இருந்த ஏரிப்புறக்கரை பகுதி மாற்றுத்தினாளிகள் உமா மகேஸ்வரி, சிவராமன், ராதிகா ஆகியோருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துணை அலுவலர் தட்சிணாமூர்த்தி சக்கர நாற்காலிகள் வழங்கினார்.

இதையடுத்து, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கமத் (TARATDAC) தலைவர் அதிரை பஹாத் தலைமையில், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தலைவர் எச். ஜலீல் முகைதீன், ஏரிப்புறக்கரை கிளைத்தலைவர் முருகன், செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் பயனாளிகளிடம் திங்கட்கிழமை ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...