Pages

Sunday, September 16, 2018

அதிரையில் மமக இளைஞர் அணி ~ தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.16
மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மண்டலம் இளைஞர் அணி, தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சாரா திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தை, ஜாகிர் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். கூட்டத்திற்கு, மமக இளைஞர் அணி மாநில செயலாளர் புழல் சேக் முகமது அலி தலைமை வகித்தார். மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ் முன்னிலை வகித்தார். அக்கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப், தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம், மமக மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

இக்கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் அக்டோபர் 7ஆம் தேதி அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில், இளைஞர் அணி மற்றும் தொண்டர் அணியின் பங்களிப்பு பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

முன்னதாக, தமுமக-மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா வரவேற்றுப் பேசினார். முடிவில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தொண்டர் அணிச் செயலாளர் முகமது கனி நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, தமுமுக/மமக அதிரை பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது, மமக அதிரை பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது,தமுமுக அதிரை பேரூர் செயலாளர் எம்.ஆர் கமாலுதீன் உள்ளிட்ட தமுமுக, மமகவினர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...