.

Pages

Saturday, September 22, 2018

குழந்தைகளின் பால் பற்களில் குவிந்துள்ள மருத்துவப் பயன்கள் (வீடியோ)

அதிரை நியூஸ்: செப்.22
அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம்.மறுப்போருக்கு நரகம் எனும்கேடு உள்ளது. (அல்குர்ஆன் 38:27)

பச்சிளம் குழந்தைகளுக்கு முதன்முதலாக வளரும் பற்கள் சில ஆண்டுகளிலேயே விழுந்துவிடும் பின்பு அதே இடத்தில் உறுதியான பற்கள் முளைக்கும். இந்த உதிரும் பற்களை பால் பற்கள் என்றழைக்கின்றோம் அல்லவா இந்த பால் பற்களில் நவீன மருத்துவத்தின் ஏராளமான பயன்கள் மறைந்துள்ளன என ஆய்வறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

வீடியோவைக் காண: blob:https://player.mangomolo.com/e0d50e35-1673-4ff3-b26d-2c6058a1ed18

A study showed that milk teeth contain a large number of intermediate stem cells that can regenerate most of the damaged tissues and cells of the human body. Teeth banks spread around the world where you can keep your children’s milk teeth for 20 years.

இந்த பால் பற்களில் பழுதான திசுக்கள் மற்றும் உடல் அணுக்களை மீண்டும் மனித உடலில் வளரச் செய்வதற்கான 'இடைநிலை ஸ்டெம் செல்கள்' பால் பற்களின் வேர்களில் குவிந்துள்ளன என ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கின்றது.மேலும் இந்த பால் பற்களைக் கொண்டு நீரிழிவு (Diabetes), பக்கவாதம் (Stroke), நரம்பு பாதிப்பு (Parkinson), மாரடைப்பு (Myocardial infarction), இரத்த சோகை (Leukemia), நிணைநீர்ச் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் (Lymphoma) போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க முடியும் என தெரிய வந்துள்ளது.

இன்றைய நவீன மருத்துவ உலகில் பால் பற்களை சுமார் 20 ஆண்டுகள் வரை பல் சேமிப்பு வங்கிகளில் (Tooth Bank) கெடாமல் பாதுகாக்கலாம் ஆனால் அதற்கென சுமார் 1,500 முதல் 2,200 டாலர்கள் வரை 20 ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டும் என்றாலும் பால் பற்களை விற்பனை செய்யும் நிலை ஏற்படும் போது அந்த 20 கட்டண செலவினங்களை திரும்பப் பெற்றுவிடலாம் என்ற நிலையையும் மறுப்பதற்கு இல்லை.

ஆடும் பால் பற்களை முறையான மருத்துவரைக் கொண்டு நீக்குங்கள் அது பின்னாளில் கல்வியறிவைப் போல் உங்களின் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் முதலீடாக கூட மாற வாய்ப்புள்ளது.

Sources: Emirates 247 / dubaipost.ae /https://www.stemsave.com/publishedresearch.aspx
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.