Pages

Wednesday, September 5, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கம்!

அதிராம்பட்டினம், செப்.05
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், கல்லூரி முதல்வருமாகிய ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில்; '18 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டியது கட்டாயக்கடமை' என்றார். மேலும், கல்லூரி பொருளாதாரத்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.பி. கணபதி, விலங்கியல் துறைத்தலைவர் பேராசிரியர் பி.குமாரசாமி, பேராசிரியை என்.சித்ரா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கருத்தரங்க ஏற்பாட்டினை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் எஸ்.சாபிரா பேகம், முத்துக்குமாரவேல், எம்.பழனிவேல், என்.சேகர் ஆகியோர் செய்து இருந்தனர். இக்கருத்தரங்கில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...