Pages

Sunday, September 16, 2018

காதிர் முகைதீன் கல்லூரி வேதியியல்துறை முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.16
காதிர் முகைதீன் கல்லூரி வேதியியல் துறை முன்னாள் மாணவ, மாணவிகளின் சங்கமம் நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன், கல்லூரி முன்னாள் வேதியியல்துறை பேராசிரியர் ஏ.அக்பர் உசேன், பூம்புகார் கல்லூரி முதல்வர் அறிவொளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில், வேதியியல்துறை பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் 120 பேர் கலந்துகொண்டனர். இவர்களில், கல்லூரி முதல்வராக, பேராசிரியர்களாக, பெரிய நிறுவனங்களில் தலைமை பதவிகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளர்ச்சிக்காக ரூ. 2 லட்சமும், மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு ரூ. 6 லட்சமும் வழங்குவதாக உறுதியளித்தனர். நிகழ்ச்சிகள், அனைத்தையும் பேராசிரியர் பி,முகமது சிராஜுதீன் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பேராசிரியர் என்.எம்.ஐ அல்ஹாஜி நன்றி கூறினார்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...