Pages

Wednesday, September 19, 2018

புனித மக்காவின் புனிதப் பள்ளியின் தொழுகை விரிப்புகள் ~ ஓர் சிறப்பு பார்வை (படங்கள்)

அதிரை நியூஸ்: செப்.19
சவுதி புனித மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரமில் விரிக்கப்படும் தொழுகை விரிப்புகள், கார்பெட்டுக்கள் 5 கட்டங்களாக சுத்தம் செய்யப்படுகின்றன. இந்த விரிப்புக்களை சுத்தம் செய்வதற்கென்றே பிரத்தியேக லாண்டரி ஒன்று புனித மக்காவில் செயல்படுகின்றதுடன் இங்கு தேர்ச்சிபெற்ற 50 தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த லாண்டரியில் தினசரி 560 விரிப்புக்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.

கடந்த ரமலானில் ஹரம் ஷரீஃப் உள்ளே தினமும் 35,000 கார்பெட்டுகள் விரிக்கப்பட்டு வந்தது தற்போது 40,000 ஆக அதிகரித்துள்ளது என்றாலும் 65,000 கார்பெட்டுக்கள் எத்தகைய அவசர சூழல்களையும் சமாளிக்கும் விதத்தில் மேலதிகமாக சேமித்தும் வைக்கப்பட்டுள்ளன. துல்காயிதா மாதத்தின் மத்தியில் இமாமுக்கான விரிப்பை தவிர அனைத்து விரிப்புகளும் அப்புறப்படுத்தப்பட்டு முஹரம் மாதம் வரை கார்பெட் இன்றி காணப்படும்.

4x1.2 மீட்டர் மற்றும் 3x1.2 மீட்டர் என 2 வகையான அளவுகளில் விரிப்புக்கள் ஹரம் ஷரீஃபில் பயன்படுத்தப்படுகின்றது. பழைய கார்பெட்டுக்கள் அவ்வப்போது கழிக்கப்படுவதுடன் பழுதாகும் கார்பெட்டுக்களை முறையாக சரிசெய்யும் பணியாளர்களும் உள்ளனர் என அதன் மேற்பார்வையாளர் முஹமது அல் ஒதைபி அவர்கள் தெரிவித்தார்.

5 கட்டங்களாக விரிப்புக்கள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகின்றன?

இங்குள்ள லாண்டரியில் 2 சுத்தப்படுத்தும் அலகுகள் (2 production lines) உள்ளன. இதில் ஒவ்வொரு அலகிலும் தினமும் தலா 200 விரிப்புக்கள் என 400 கார்பெட்டுகள் சுத்தம் செய்யப்படுகின்றன. இதுவே ரமலான் மற்றும் ஹஜ் காலங்களில் அலகுக்கு 280 என திறன் அதிகரிக்கப்பட்டு தினமும் 560 கார்பெட்டுகள் சுத்தம் செய்யப்படுகின்றன.

முதற்கட்டம்:
விரிப்புக்கள் அழுக்கு மற்றும் தூசுக்களை உறிஞ்சி எடுக்கும் இயந்திரத்தினுள் விடப்படும். இந்த இயந்திரம் ஒரே நேரத்தில் 2 கார்பெட்டுக்களை 1.5 நிமிடத்திற்குள் சுத்தம் செய்யும்.

இரண்டாம் கட்டம்:
ஒரு தானியங்கி இயந்திரம் மூலம் ஷாம்பூ மற்றும் நறுமணப் பொருட்களை கொண்டு சுத்தம் செய்யப்பட்டு சுத்தமான தண்ணீர் கொண்டு அலசப்படும். இந்த சவர்க்கார பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய கேடுகளையும் விளைவிக்காதவை.

மூன்றாம் கட்டம்:
உருளை வடிவ இயந்திரத்தினுள் ஒரே நேரத்தில் 3 கார்பெட்டுகள் விடப்பட்டு இதிலுள்ள தண்ணீர் 2.5 நிமிடத்திற்குள் பிழியப்படுகின்றன.

நான்காம் கட்டம்:
தண்ணீர் பிழியப்பட்ட விரிப்புக்கள் கோடைகாலத்தில் 24 மணிநேரமும், குளிர்காலத்தில் 48 மணிநேரமும் உலர வைக்கப்படுகின்றன.

ஐந்தாம் கட்டம்:
இறுதியாக உலர வைக்கப்பட்ட விரிப்புக்கள் மீண்டும் அதிசக்திவாய்ந்த வேக்வம் மெஷின் (powerful vacuum cleaners) கொண்டு மீண்டும் சுத்தப்படுத்தப்பட்டு ஹரம் ஷரீஃபின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...