Pages

Friday, September 7, 2018

பட்டுக்கோட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: எம்.எல்.ஏ சி.வி சேகர் தொடங்கி வைத்தார்!

அதிராம்பட்டினம், செப்.07-
அதிராம்பட்டினம் அடுத்து புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பட்டுக்கோட்டையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

பள்ளித்தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பேரணியை, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு, பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் சென்றடைந்தது. இதில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐ. மகாலட்சுமி, வாட்டசியர் சாந்தகுமார், காவல்துறை துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன், நகராட்சி ஆணையர் சே.அலாவுதீன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் மா.கோபாலகிருஷ்ணன், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மலை அய்யன், அதிமுக முன்னாள் மாவட்டச் செயளாளர் கார்த்திகேயன், அதிமுக பட்டுக்கோட்டை நகர செயலாளர் சு.ப இராஜேந்திரன், அதிமுக ஒன்றிய செயலாளர் பி.சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை, அதிரை பேரூர் முன்னாள் செயலாளர் கு.பாஞ்சாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பேரணி ஏற்பாட்டினை, பள்ளி முதல்வர் என்.ரகுபதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்துருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...