Pages

Sunday, September 16, 2018

தூய்மை சேவை இயக்க பிரசாரம் ~ ஆட்சியர் தொடங்கி வைத்தார் (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஒன்றியம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மணக்கரம்பை ஊராட்சியில் மகாத்மா காந்தி 150வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் தூய்மை இயக்க நான்காம் ஆண்டு நிறைவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (16.09.2018) தூய்மை சேவை இயக்க பணிகளை தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

மணக்கரம்பை ஊராட்சி பொது மக்களிடம் விழிப்புணர்வு தூய்மை சேவை இயக்க துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி தெரிவித்ததாவது:
மகாத்மா காந்தி 150வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் தூய்மை இந்திய இயக்கம் தொடக்கப்பட்டு நான்காம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்  செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2ம் நாள் வரை தூய்மை சேவை 2018 ஆக பொது மக்களின் பங்கேற்புடன் நடத்தப்படவுள்ளது. இதில் ஊக்குநர்கள், வறுமை ஒழிப்பு  சங்க பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் மூலம் சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் தூய்மை பணிகளும், அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சமுதாய தலைவர்கள், சமயத் தலைவர்கள், ஊராட்சி அளவிலான பணியாளர்கள் மற்றும் பொது மக்களிடையே கலந்துரையாடல் மேற்கொள்ளல், பொது மக்களிடையே இரட்டை உறிஞ்சு குழி கழிவறையின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தல் மற்றும் கழிவறை கட்ட உதவி செய்தல், ஊராட்சிகளில் திறந்த வெளி கழிப்பிடமற்ற நிலையினை அடைவதற்கு விழா கொண்டாடுதல் மற்றும் கிராம கௌரவ யாத்திரை மேற்கொள்ளுதல், அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தூண்டுதல் பயிற்சி ஊக்குநர்களை கொண்டு விழிப்புணர்வுயளித்தல் மற்றும் பழக்க வழக்க மாற்றத்திற்கு அடிப்படை சுகாதாரம் குறித்த தகவல்களை சமூகம், பள்ளிகள், அங்கன்வாடிகளில் தெரிவித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

பொது மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து சுகாதார பணியாளர்களிடம் வழங்கி தங்கள் பகுதிகளை சுகாதாரமாக வைத்திடவும், குப்பைகளை கால்வாய்கள், மழை நீர் கால்வாய் ஆகியவற்றில் கொட்டாமல் தூய்மையாக இருப்பதன் மூலம் டெங்கு போன்ற  கொசுக்கள் உற்பத்தியாகாமல் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.  மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் மூலம் மக்கும் குப்பைகள் விவசாயத்திற்கும், மக்கா குப்பை தார் சாலை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.  எனவே பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொது மக்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...