Pages

Saturday, September 29, 2018

கடலில் தரையிறங்கிய விமானம் ! பயணிகள் அனைவரும் நலம் (படங்கள், வீடியோ)

அதிரை நியூஸ்: செப். 29
ஆஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள பப்புவா நியூ கினியா (Papua New Guinea) என்னும் நாட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ளது 'மைக்ரோனேசியா' (Micronesia) எனும் வரைபடத்தில் கூட கண்ணுக்குத் தெரியாத ஒரு குட்டி நாடு. மைக்ரோனேசியாவுக்கு சொந்தமாக சுமார் 600 தீவுகள் இருந்தாலும் சுமார் 4 தீவுகளில் மட்டுமே மக்கள் பெருமளவில் வசிக்கின்றனர். அதில் ஒரு தீவின் பெயர் விணொ (Weno). இங்குள்ள விமான நிலையத்தின் பெயர் சூக் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் (Chuuk Int'l Airport).

பக்கத்து நாடான பப்புவா நியூ கினியாவிற்கு சொந்தமான ஏர் நியுகுனி (Air Nuigini) எனும் விமானம் 36 பயணிகள் மற்றும் 11 விமான ஊழியர்களுடன் சூக் விமான நிலையத்திற்கு சென்றது ஆனால் ஓடுதளத்தில் தரையிறங்குவதற்கு முன்பாகவே கடலில் இறங்கியது. இந்த கடற்பகுதி ஆழம் குறைவான லகூன் (Lagoon) பகுதியானதால் விமானம் மெதுவாகவே மூழ்கத் துவங்கியது. எனினும் அருகிலிருந்த மக்கள் உடனடியாக படகுகளில் விரைந்து வந்து அனைத்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை எத்தகைய காயங்களுமின்றி பத்திரமாக மீட்டனர்.



Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...