Pages

Tuesday, September 4, 2018

தென்னக விமானப் படை அலுவலர் தஞ்சை வருகை!

தஞ்சாவூர் விமானப் படை நிலையத்துக்கு இந்திய விமானப் படையின் தென்னகத் தலைமை கட்டளை அலுவலர் ஏர் மார்ஷல் பி. சுரேஷ் திங்கள்கிழமை வந்தார்.

இவரை தஞ்சாவூர் விமானப் படை நிலைய கட்டளை அலுவலர் பிரஜுவல் சிங் வரவேற்றார். இதையடுத்து, ஏர் மார்ஷல் சுரேஷ் நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவுகள், அலகுகள், தயார் நிலையில் உள்ள இயக்கச் சாதனங்களை ஆய்வு செய்தார். மேலும், தென் மண்டலத்தில் முதன்மை போர் விமானப் படைதளமான இந்நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சேவைப் பணிகள், ஆயத்தத் தயாரிப்புத் திட்டங்களைப் பார்வையிட்டு பாராட்டினார்.

பின்னர், அலுவலர்களுடன் ஏர் மார்ஷல் சுரேஷ் பேசுகையில், வளங்களைத் தேர்வு செய்தல், முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து கவனம் செலுத்துதல், பயிற்சி, செயல் திறன், தொழில்முறைத் தேர்ச்சி ஆகியவை குறித்து விவரித்தார்.

இவருடன் வந்த விமானப் படை வீரர்களின் மனைவியர் நலச் சங்கத்தின் மண்டலத் தலைவர் ராதா சுரேசை உள்ளூர் விமானப் படை வீரர்களின் மனைவியர் நலச் சங்கத் தலைவர் வந்தனா சிங் வரவேற்றார். இவர் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்களையும், விமானப் படைப் பள்ளி, விளையாட்டுடன் கூடிய கல்வி மையத்தையும் ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...