Pages

Tuesday, September 4, 2018

கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை ~ விவசாயிகள் மறியல் போராட்டம்!

பட்டுக்கோட்டை, செப்.04
கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை எனக்கூறி பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 43 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் நூற்றுக் கணக்கான நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதாகவும்,  தற்போது வரை மேட்டூர் அணை நான்கு முறை முழுக் கொள்ளளவை எட்டியும், 130 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்துள்ளதாகப் புகார் கூறும் விவசாயிகள், பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வாரவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர்

இன்று பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை அடைத்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், 20 நாட்களுக்குள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும் என வாக்குறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...