Pages

Tuesday, September 11, 2018

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தேசிய விருது !

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய விருது வழங்கப்பட்டது.

புதுடெல்லி, மத்திய ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் துறையின் சாhபில்  மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் 2016-2017 ஆம் ஆண்டு மின்னணு முறையில் 100 சதவிகிதம் சம்பளம் வழங்கியது, அதிக நபர்களுக்கு வேலை வழங்கியது மற்றும் முறையான ஆவணங்களை பராமரித்ததது, ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இன்று (11.09.2018) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் ராம் கிரிபால் யாதவ் ஆகியோரிடமிருந்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை சிறப்பு பணிகள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேசிய விருதினையும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை சான்றிதழினையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துறை செயலாளர் அம்ரித் சின்ஹா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராலசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...