Pages

Tuesday, September 4, 2018

தஞ்சை மாவட்டத்தில் தரமற்ற, காலவதியான உணவுப்பொருட்கள் விற்பனையா? பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம்: ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், உணவகங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை நிலையங்களில் தரமற்ற, காலவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்தால், பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் உணவுப்பொருட்கள் விற்பனை நிலையங்களும் உணவுப்பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறவில்லையெனில் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களின் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு தகுந்த உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற்று கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பொது மக்கள் உணவகங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை நிலையங்களில் சுகாதாரமற்ற முறையில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலோ, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் உணவுப்பொருட்கள் அடைத்து விற்பனை செய்யப்பட்டாலோ, காலவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டாலோ பொது மக்கள் 9444042322  என்ற வாட்ஸ்-ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உணவுப் பொருட்கள் பாதுகாப்பு குறித்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் கே.சி.அருண்  அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை மற்றும் பாபநாசம் வட்டாரங்களுக்கு மருத்துவர் கருப்பசாமி – அலைபேசி எண்: 9865041498 அவர்களும், பூதலூர் மற்றும் திருவையாறு வட்டாரங்களுக்கு மருத்துவர் அன்புச்செல்வன் – அலைபேசி எண்:  8883555355 அவர்களும், மதுக்கூர் வட்டாரத்திற்கு, மருத்துவர் முத்தமிழ் – அலைபேசி எண்: 9442544455 அவர்களும், ஒரத்தநாடு, திருவோணம் மற்றும் தஞ்சாவூர் வட்டாரங்களுக்கு மருத்துவர் மதன்குமார் – அலைபேசி எண்: 9578005550 அவர்களும், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களுக்கு மருத்துவர் சுப்ரமணி – அலைபேசி எண்: 7373923675 அவர்களும், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களுக்கு மருத்துவர் பாலகுரு – அலைபேசி எண்:  9486719030 அவர்களும், கும்பகோணம் நகரம் மற்றும் வட்டாரத்திற்கு மருத்துவர் மகேஷ் – அலைபேசி எண்:9952400427 அவர்களும், பட்டுக்கோட்டை நகரம் மற்றும் வட்டாரத்திற்கு மருத்துவர் முத்துக்குமார் – அலைபேசி எண்: 9965142173 அவர்களும், தஞ்சாவூர் நகர முதல் பகுதிக்கு மருத்துவர் ரெங்கராஜன் – அலைபேசி எண்:9361888388 அவர்களும், தஞ்சாவூர் நகர இரண்டாம் பகுதிக்கு மருத்துவா அழகுபாண்டி – அலைபேசி எண்: 9790183187 அவர்களும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பொது மக்கள் உணவகங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை நிலையங்களில் விநியோகிக்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் குறித்த புகார்களை சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...