.

Pages

Thursday, September 27, 2018

உய்குர் முஸ்லீம் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கும் சீன அரசு!

அதிரை நியூஸ்: செப்.27
விளங்குவதற்காக...
இந்தியாவில் ஆட்சியிலிருக்கும் பீஜேபி அரசு பல்லின இந்தியர்கள் அனைவரையும் ஒற்றை ஆட்சியின் கீழ், ஒற்றை பிராமண மனுதர்ம காலச்சாரத்தின் கீழ், இந்து மதத்தின் கீழ், ஹிந்தி மொழியின் கீழ் கொண்டு வர துடிக்கின்றது. இதையே இன்னும் வன்மையாக ராணுவம் மற்றும் போலீஸ் பலத்துடன் செய்தால் அதுவே சீன கம்யூனிச ஆட்சி. காவியும் சிவப்பும் மட்டுமே இவர்களுக்கிடையேயுள்ள ஒரே வித்தியாசம்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் உய்குர் (Uiqhur) மற்றும் கஸாக் (Kazhak) இன முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. உய்குர் இன முஸ்லீம்கள் தனித்த கலாச்சரத்திற்கு சொந்தக்காரர்கள் இவர்களுக்கும் சீன கலாச்சாரத்திற்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை. உய்குர் இன முஸ்லீம்கள் வாழும் பகுதியில் சீன அரசு பல்லாண்டுகளாகவே திட்டமிட்டு ஹான் இன சீனர்களை பெருமளவில் குடியமர்த்தி இப்பிராந்தியத்தில் உய்குர் இன முஸ்லிம்களை சிறுபான்மை சமுதாயமாக்கும் சதியில் ஈடுபட்டு வருகிறது.

உய்குர் இன முஸ்லீம்களின் உடல் மற்றும் முக அமைப்பிற்கும் ஹான் இன சீனர்களுடைய உடல் அமைப்பிற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமுள்ளது. இந்த உய்குர் இனத்தையே சுத்தமாக துடைத்தொழிக்கும் நடவடிக்கையில் தற்போது வெறித்தனமாக ஈடுபட்டுள்ளது சீன கம்யூனிச அரசு.

உய்குர் இன மக்களை மறுகல்வி (Re-Education) என்ற பெயரில் வதை முகாம்களில் அடைத்து கட்டிவைத்து அடித்து சித்ரவதை செய்து கம்யூனிச கொள்கைகளை படிக்கச் செய்வது. இவ்வாறாக சுமார் 10 லட்சம் உய்குர் இன மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. சபையின் உலக பொதுமன்னிப்பு சபை (Amnesty International) தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் மைக் போம்பியோவும் சீன அரசு முஸ்லீம்களை ஒடுக்குவதை கண்டித்துள்ளார்.

குழந்தை வழுக்கட்டாயமாக பெற்றோர்களிடமிருந்து பிரித்துச் சென்று இருமொழி கல்விக்கூடங்கள் என்ற பெயரிலுள்ள தடுப்பு முகாம்களில் அடைத்து பெற்றோர்கள் இருந்தும் அவர்களை அனாதைகளாக வளரச் செய்து வருகிறது. அவர்களது விடுதலை குறித்து எந்த உத்தரவாதமும் இல்லை. சீன அரசால் கடத்திச் செல்லப்படும் குழந்தைகளுக்கு சீனக் கலாச்சாரம், மாண்டரீன் மொழி, சீன உடைகள், தேசபக்தி / தேசத்தை நேசிப்பது என்ற பெயரில் கம்யூனிச பாடங்கள் மட்டும் போதித்து வளர்ப்பதன் மூலம் உய்குர் இனத்தின் அடையாளத்தை முற்றாக அழிப்பது.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் (Xi Xinping) கடந்த 2012 ஆம் பதவி ஏற்றது முதல் உய்குர் இன முஸ்லீம்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதுடன் அடக்குமுறைகளுக்கு எதிரான இயல்பாய் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தி அழிப்பது. இவ்வாறான கொடுமைகள் சீன சர்வாதிகாரி மாசேதுங் ஆட்சி காலத்தில் கூட நடைபெற்றதில்லை.

உய்குர் இன முஸ்லீம்கள் தாடி வைத்தல், புர்கா அணிதல், சமூக வலைத்தளங்களில் பெருநாள் வாழ்த்து தெரிவிப்பது, குர்ஆன் பிரதிகளை வைத்திருப்பது, தங்களது பகுதிகளில் பிறை சின்னங்களை வரைந்து வைப்பது, உய்குர் இனத்தினர் தாய்மொழியில் பேசிக்கொள்வது, தொழுகை மற்றும் இதர வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போட்டோக்களை ஆன்லைனில் பகிர்ந்து கொள்வது, வெளிநாட்டில் வாழும் உறவினர்களுடன் தொடர்பு வைத்திருப்பது யாவும் சீன அரசின் பார்வையில் தீவிரவாத செயல்கள்.

உய்குர் மற்றும் கஸாக் இன முஸ்லீம்களின் மீது அநீதிகளை கட்டவிழ்த்து விடுவதற்கென்றே முன்பு திபேத்தில் பணியாற்றிய சென் குவாங்குவோ என்பவரை ஜின்ஜியாங் மாகாணத்தின் பொறுப்பாளராக நியமித்துள்ளது.

உலகின் பல பாகங்களிலும் முஸ்லீம்களே பெரும் வன்முறைக்கும் இன அழிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர் ஆனாலும் வீண் பழிகளை முஸ்லீம்களே வஞ்சக அரசுகளின் தொடர் சதி மற்றும் ஊடக பயங்கரவாதங்களால் சுமக்க வேண்டியுள்ளது. உலகளாவில் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பெரும்பான்மை மக்களை நம்பவும் வைத்துள்ளனர். முஸ்லீம்களை சீண்டுவதில் முதலாளித்துவம், தொழிலாளித்துவம், ஆத்திகம், நாத்திகம் என அனைவரும் ஓரணியே.

Source: Arab News / Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.