Pages

Friday, September 14, 2018

அதிரையில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.14
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், சிறப்பாக பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ‘நேஷன் பில்டர்-2018’ விருது வழங்கும் விழா ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் கதீஜா மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை வகித்த, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் சம்சுதீன் வரவேற்றுப் பேசினார். இதில், அதிராம்பட்டினம் அண்ணா தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை டி.விஜயா, கடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை ஆர்.சுதா, நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.ஆரோக்கியராஜ், கரையூர் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் டி.சுபாஷ் சந்திர போஸ், எஸ்.அன்பரசன், ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஏ.ஹில்டா மேரி ஆகியோருக்கு, சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ, அன்பழகன் ஆகியோர் 'நேஷன் பில்டர்-2018' விருது வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். நிகழ்ச்சியினை, ரோட்டரி சங்க பொருளாளர் எஸ்.சாகுல் ஹமீது, எம்.உதயகுமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

முன்னதாக, ரோட்டரி சங்க துணை ஆளுநர் கே. திருநாவுக்கரசு, ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் மெட்ரோ மாலிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழா முடிவில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க செயலாளர் இசட். அகமது மன்சூர் நன்றி கூறினார். இவ்விழாவில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தினர், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...