Pages

Tuesday, September 18, 2018

கஞ்சா விற்பதாக வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் செய்திக்கு மறுப்பு!

அதிராம்பட்டினம், செப்.18
அதிராம்பட்டினம், மெயின் ரோட்டில், கடந்த 4 ஆண்டுகளாக 'மகாதேவ் எலெக்ட்ரிக்கல்ஸ்' என்கிற தொழில் நிறுவனத்தை நடத்தி வருபவர் பிரகாஷ்குமார். இவரது நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் பிரேம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரேம் என்பவர் அதிராம்பட்டினம் பகுதியில் கஞ்சா விற்பதாக செய்தி வைரலாக பரவி வருகிறது.

இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்து பிரகாஷ் குமார் நம்மிடம் கூறியது;  
பிரேம் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக எங்களது கடையில் பணியாற்றி வருகிறார். நான் அறிந்தவரை, புகை பிடிப்பது உள்ளிட்ட எந்தவொரு தீய பழக்க வழக்கங்களும் இவரிடம் இருந்ததில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது முகநூலில் உள்ள படத்தை பதிவிறக்கம் செய்து, அதிரையில் இவர் கஞ்சா விற்பதாகக் கூறி இவரது படத்துடன், ஆடியோ செய்தியை வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவ விட்டுள்ளனர். இது முற்றிலும் தவறான செய்தி. அவதூறாக பரப்பப்படுகிறது. எனவே, இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம். மேலும், செய்தியின் உண்மைத்தன்மை அறியாமல் யாரும் பிறருக்கு பார்வேர்டு செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தொழில் போட்டி காரணமாக இச்செய்தி பரப்பப்படுகிறது. என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...