.

Pages

Sunday, September 23, 2018

மறைந்த மகனின் நினைவாக சாலைகளின் குழிகளை செப்பனிடும் மாமனிதர் (படங்கள்)

அதிரை நியூஸ்: செப்.23
மும்பை மாநகரம் எவ்வாறு இந்தியாவின் வர்த்தக தலைநகராக அறியப்படுகின்றதோ அதேபோல் உலகிலேயே அதிகமான குண்டும் குழியுமான (potholes) சாலைகளுடைய மாநகரம் என்று சத்தமில்லாமல் ஒரு கின்னஸ் சாதனையையும் தன்னகத்தே வைத்துள்ளது. நவீன் லாதே என்பவர் தன்னுடைய www.mumbaipotholes.com என்ற இணையதளத்தில் மும்பை நகரத்திலுள்ள சுமார் 27,000 குண்டு குழிகளைப் பற்றி பதிவு செய்து வைத்துள்ளார். எரிமலை வாய் போன்ற இந்த குண்டு குழிகள் கோடைக்கால பரவ மழைகளால் ஏற்படுவதாக மும்பை மாநகராட்சி ரெடிமேட் பதில் ஒன்றையும் வைத்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்பையில் உறவினர் ஒருவருடன் மோட்டார் பைக் பின்னிருக்கை அமர்ந்து செல்கிறார் 16 வயதான பிரகாஷ் பில்ஹோரே. திடீரென சாலையில் ஒரு பள்ளம் குறுக்கிட மோட்டார் பைக்கிலிருந்து இருவரும் தூக்கியெறியப்படுகின்றனர். இதில் ஹெல்மெட் அணிந்து வண்டியோட்டிய உறவினர் சிறுகாயங்களுடன் பிழைத்துக் கொள்ள பின்னிருக்கை இருந்த மாணவர் பிரகாஷ் மண்டையில் அடிபட்டு இறந்து போகின்றார். இங்கிருந்து துவங்குகிறது தாதாராவ் பில்ஹோரே அவர்களின் மனிதாபிமானப் பயணம்.

இறந்து போன சிறுவன் பிரகாஷின் தந்தையான தாதாராவ், இந்த குண்டு குழிகளால் இனி தன்னைப்போல் எந்தத் தந்தையும் தங்களுடைய குழந்தைகளை இழந்து வாடக்கூடாது என முடிவெடுக்கின்றார். அரசு இயந்திரங்களை எதிர்பார்த்திராமல் தன்னால் இயன்றளவு மும்பை சாலைகளில் உள்ள குண்டு குழிகளை மூடி செப்பனிட முடிவு செய்து காரியத்தில் இறங்குகிறார்.

கட்டுமானங்கள் நடைபெறும் இடம் மற்றும் கட்டிடங்கள் உடைக்கப்படுகின்றன இடங்களிலிருந்து அதன் சிதிலங்களை மற்றும் மணலை பெற்று சிமெண்ட்டுடன் கலந்து குண்டு குழிகளை சமன்படுத்தும் பணிகளை தனியாளாக தொய்வின்றி தொடர்ந்து செய்து வருகின்றார்.  இதுவரை சுமார் 600 குழிகளுக்கு மேல் மும்பை நகர் முழுவதும் செப்பனிட்டுள்ளார். செப்பனிடும் பணி முடிந்தபின் வானத்தை நோக்கி தன்னுடைய மகனுக்காக பிரார்த்திக்கின்றார் இந்த 48 வயதேயான காய்கறி வியாபாரி.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.